கத்தார் ஹஜ் பயணிகளின் நலன் கருதி கத்தார் - சவூதி தரைவழியை திறக்க மன்னர் சல்மான் அதிரடி உத்தரவு!

Published On Thursday, 17 August 2017 | 08:34:00

கத்தாரிலிருந்து ஹஜ்ஜுக்கு வரும் யாத்திரீகர்களின் நலன் கருதி கத்தார் - சவூதி தரைமார்க்கத்தை உடனடியாக திறக்குமாறு சவூதி மன்னர் சல்மான் அதிரடி அறிவிப்பு ஒன்றை கடந்த நள்ளிரவு வெளியிட்டுள்ளார். அந்த வகையில் கத்தார் மற்றும் சவூதி அரேபியாவுக்கு எல்லையாக இருக்கும் மூடப்பட்டிருந்த  சல்வா வீதி ஹஜ் பிரயாணிகளுக்காக திறக்கப்படவுள்ளது. ஆகவே தரைவழியாக பயணிக்க விரும்பும் கத்தார் ஹஜ் யாத்திரீகர்கள் இதன் ஊடாக பயணிக்க முடியும்.

மேலும் விமானம் மூலமாக பயணிக்க விரும்புபவர்களுக்கு சவூதி அரேபியாவுக்கு சொந்தமான பிரத்தியேக விமானம் கத்தார் விமான நிலையம் அனுப்பி வைக்கப்பட்டு அங்கிருந்து பிரயாணிகள் அழைத்து வரப்படுவார்கள் என்பதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

சவூதி அரேபியாவுக்கும் கத்தாருக்கும் இடையில் இருக்கும் ஒரே ஒரு தரைமார்க்கம் இந்த சல்வா எல்லையாகும். தற்போது திறக்கப்படும் சல்வா எல்லை ஊடாக அணைத்து கத்தாரிகளும் ஹஜ்ஜுக்கு செல்ல முடியும். கத்தார் - சவூதிக் கூட்டணிக்கிடையில் கடந்த ஜுன் 5ம் திகதி ஏற்பட்ட முறுகல் நிலையைத் தொடர்ந்து மேற்படி தரைமார்க்கத்தை சவூதி அரேபியா முடியிருந்தமை குறிப்பிடத்தக்கது. 

சவூதி மன்னரின் இந்த அறிவிப்பின் மூலம் கத்தாரில் உள்ளவர்கள் ஹஜ் செய்வதில் எந்தப் பிரச்சினையும் இல்லை என்பது உறுதியாகின்றது. கத்தார் ஹஜ் யாத்திரீகத்களை வரவேற்க தாங்கள் காத்திருப்பதாக சவூதியின் உத்தியோப பூர்வ செய்திகள் தெரிவிக்கின்றன.

ஆங்கிலத்தில் - அரப்நியூஸ்
தமிழில் - உண்மையின் பக்கம்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved