அமீரகத்தில் இனி வீட்டில் இருந்தவாறு ஆன்லைன் வழியாக விசா விண்ணப்பிக்கலாம் ( முழு விவரம்)

Published On Thursday, 3 August 2017 | 12:04:00

அமீரகத்தில் பல்வேறு வகையான விசாக்களுக்கு விண்ணப்பிக்க விரும்புவோர், நடப்பு விசாவை புதுப்பிக்க விரும்புவோர், விசாவை ரத்து செய்ய விரும்புவோர் என அனைவரும் இனி டைப்பிங் சென்டர்களுக்கோ அல்லது வாடிக்கையாளர் சேவை மையங்களுக்கோ நேரிடையாக செல்ல வேண்டியதில்லை மாறாக வீட்டிலிருந்தவாறே 10 நிமிடத்தில் விண்ணப்பிக்கலாம்.

அமீரக உள்துறை அமைச்சகம் அறிவித்துள்ள கீழ்காணும் ஈ-சேனல் எனப்படும் ஆன்லைன் சேவை வழியாக அமீரகத்தினரும், அமீரகத்தில் ரெஸிடென்ஸி விசாவில் உள்ளவர்களும், வளைகுடா அரபு நாடுகளை சேர்ந்தவர்களும் நேரடியாகவே விசா வழங்க வேண்டி விண்ணப்பிக்க முடியும்.

https://echannels.moi.gov.ae என்ற இந்த சுட்டிக்குள் சென்று உங்களுடைய ஈமெயில் முகவரி மற்றும் பாஸ்வேர்டை பயன்படுத்தி விசா விண்ணப்பத்தை பூர்த்தி செய்யலாம். மேலும் டைப்பிங் சென்டர்கள், நிறுவனங்கள், இமராத்திகள், ரெஸிடென்ஸ் விசாவில் உள்ளவர்கள், வளைகுடா நாடுகளைச் சேர்ந்தவர்கள் போன்ற எந்த தனிநபரும் நேரிடையாக விண்ணப்பிக்க முடியும்.

https://echannels.moi.gov.ae என்ற ஈ-சேனல் வழியாக,

1. இமராத்திகள் யாருக்கும் ஸ்பான்ஸர் செய்து விசா பெற முடியும்.

2. ரெஸிடென்ஸ் விசாவில் உள்ள வெளிநாட்டவர்கள் புதிய விசா பெற, விசாவை புதுப்பிக்க, விசாவை ரத்து செய்ய விண்ணப்பிக்க முடியும்.(அதிரை நியூஸ்)

3. வளைகுடா நாடுகளை சேர்ந்தவர்களும் புதிய விசா பெர்மிட்டுகளுக்கு விண்ணப்பிக்கலாம்.

4. விசிட்டில் வந்துள்ளவர்களும் புதிய விசாவுக்கு விண்ணப்பிக்கலாம்.

5. வர்த்தக நிறுவனங்களும் தங்களுக்கு தேவையான விசாக்களுக்கு The General Directorate of Residency and Foreigners’ Affairs (GDRFA) அலுவலகம் வராமலேயே ஈ-சேனல் வழியாக விண்ணப்பிக்கலாம்.(அதிரை நியூஸ்)

6. ஈ-சேனல் வழியாகவே விண்ணப்பிப்பதுடன் அதன் விபரங்களை (Follow Up) எந்த நேரமும் தெரிந்து கொள்வதுடன் விசா காப்பிகளை பிரிண்ட் எடுத்துக் கொள்ளலாம்.

7. மின்னனு சாதனங்கள் மற்றும் மொபைல் வழியாகவே தங்களுடைய விசா விண்ணப்ப வேலைகளையும் கட்டணம் செலுத்துவதையும் இலகுவாக எங்கிருந்தும் செய்து கொள்ளலாம்.

8. ரெஸிடென்ஸ் விசாவில் உள்ளவர்கள் விசா தொடர்புடைய அபராதங்களை செலுத்தவும், விசா செக்யூரிட்டி டெபாசிட் தொகையை திரும்பப் பெற்றுக் கொள்ளவும் இதில் வசதியுள்ளது.

9. ஈ-சேனலை பயன்படுத்த தெரியாதோர் அல்லது அதற்கான வசதி இல்லாதவர்கள் வழமைபோல் டைப்பிங் சென்டர்களுக்கு செல்லலாம்.

10. விரைவில் விசா விண்ணப்பதாரர்களின் முக ஸ்கேனிங் (Face Reading) அடிப்படையில் விசா பெறுதல், விமான நிலைய ஈ கேட்டுகள், ஸ்மார்ட் கேட்டுகள் ஆகியவையும் இணைக்கப்படும்

என்பன போன்ற இன்னும் பல சிறப்பு அம்சங்களுடன் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved