Tuesday, 1 August 2017

அனுராத புரத்தில் வைத்து வெளிநாட்டு யுவதிக்கு ஆட்டோ ட்ரைவர் செய்த வேலை! அதிரடியாக கைது செய்த போலீஸ்

வெளிநாட்டு யுவதியை பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய குற்றச்சாட்டுக்கு அமைய அநுராதபுரம் காவற்துறையால் முச்சக்கர வண்டி சாரதியொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சுற்றுலாவுக்காக இலங்கை வந்த சுவிஸர்லாந்தைச் சேர்ந்த 22 வயதான பல்கலைக்கழக மாணவியே இவ்வாறு பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி அநுராதபுரம் நகரில் அமைந்துள்ள இரவு விடுதியொன்றுக்கு இரண்டு நண்பர்களுடன் சென்று, பின்னர் மீண்டும் அவர் தங்கியிருந்த ஹோட்டலுக்கு செல்ல முச்சக்கர வண்டியொன்றில் ஏறிவுள்ளார்.
இதன்போது முச்சக்கர வண்டியின் சாரதி அவரை ஹோட்டலுக்கு அழைத்துச் செல்வது போல் வேறு ஒரு இடத்திற்கு அழைத்துச் சென்று பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தியுள்ளதாக தெரியவந்துள்ளது.
பின்னர் குறித்த யுவதியை அநுராதபுரம் பேருந்து நிலையத்திற்கு அருகில் கொண்டு வந்து விட்டு, குறித்த தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ஹோட்டலில் இருந்த தனது நண்பிக்கு இது தொடர்பில் அவர் தொலைபேசி ஊடாக அறிவித்த நிலையில், ஹோட்டலின் முகாமையாளருடன் அந்த இடத்திற்கு நண்பி வந்துள்ளார்.
பின்னர் சம்பவம் தொடர்பில் அநுராதபுரம் காவற்துறைக்கு முறைப்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில், காவற்துறை மேற்கொண்ட விசாரணையின் போது சந்தேக நபரான முச்சக்கர வண்டி சாரதி கடந்த 30 ஆம் திகதி கைது செய்யப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்துள்ளார்.
35 வயதான நபரொருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த யுவதி மேலும் 3 யுவதிகளுடன் இலங்கைக்கு சுற்றுலா வந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

Author: verified_user

0 comments: