அமீரகத்தில் எதிர்வரும் நாட்களில் வெயிலும், உஷ்ணமும் அதிகரிக்கும்: வானிலை அறிவிப்பு !

Published On Thursday, 17 August 2017 | 00:25:00


அமீரக தேசிய வானிலை மையம் அறிவித்துள்ள முன்னறிவிப்பின்படி, நாளை முதல் எதிர்வரும் சில நாட்களில் வெயிலின் தாக்கத்தால் உஷ்ணம் உயரும் இதனால் அதிகரிக்கும் இறுக்க நிலையால் (Humidity) மக்கள் வியர்வையால் தவிக்க நேரிடும்.

அமீரகத்தின் பெரும்பாலான பகுதிகள் 40 டிகிரி செல்சியஸிற்கு குறையாமல் இருக்கும் அதேவேளையில் கிழக்குப் பிராந்திய மலைப்பிரதேசங்களில் 30 டிகிரி செல்சியஸ் வெப்பமே நிலவும் மேலும் அங்கு மழைத்தூறல்களையும் எதிர்பார்க்கலாம்.

நாளை வியாழன் அன்று அமீரகம் சூடாக காணப்படுவதுடன் ஓரிரு இடங்களில் மேகமூட்டமும் காணப்படும் என்பதால் கிழக்கு மற்றும் தென் பிராந்திய அமீரகத்தின் ஒரு சில இடங்களில் சிறு மழை பெய்ய வாய்ப்புண்டு. வெள்ளிக்கிழமை காலை முதலே இறுக்கம் அதிகரித்து காணப்படும். ஒரு சில இடங்களில் புழுதிக்காற்றும் வீசும் என வானிலை மையம் அறிவித்துள்ளது.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved