Saturday, 5 August 2017

மத்திய கிழக்கில் கடும் வெப்பம்! - வாகனங்கள் தீப்பற்றாமல் இருப்பதற்கான சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்:

தற்போது மத்திய கிழக்கு நாடுகளில் கடுமையான வெப்பம் நிலவுவது அறிந்ததே. அந்த வகையில் வாகனங்களில் தீப்பற்றும் சம்பவங்கள் அங்காங்கு பதிவாகியுள்ளன. இது போன்ற வாகனங்கள் தீப்பற்றுதலை தவிர்க்க விடயங்களை பின்பற்றுவது அவசியம்....

1. வாகனங்களை குறித்த காலக்கெடுவில் முறையாக வேலை தெரிந்த டெக்னீஷியன்களிடம் சர்வீஸ் செய்து கொள்ள வேண்டும்.

2. தினமும் தவறாமல் வாகனத்தில் உள்ள தண்ணீர் மற்றும் வெப்ப அளவை கண்காணித்து வர வேண்டும்.

3. எண்ணெய் சிந்துதலை தவிர்ப்பதற்காக டேங்க் மூடிகளை இறுக்கமாக மூடி வைக்கவும்.

4. வாகனத்தினுள் அல்லது அதன் அருகில் இருந்து புகைப் பிடிப்பதை எப்போதும் தவிர்க்கவும்.(அதிரைநியூஸ்)

5. பங்க்குகளில் எண்ணெய் நிரப்பும் போது எப்போதும் வாகன எஞ்சின் இயக்கத்தை நிறுத்தி விடவும்.



6. எளிதில் தீப்பற்றக்கூடிய எத்தகைய பொருட்களையும் வாகனத்தில் விட்டுச் செல்லாதீர்.

Author: verified_user

0 comments: