Tuesday, 1 August 2017

சுற்றுலா புறப்பட தயாரான மாணவர்களின் பயணப் பொதிகளில் மது போத்தல்கள், அதிபர் அதிரடி நடவடிக்கை!

குருனாகல் நகரிலுள்ள பிரபல கலவன் பாடசாலையொன்றிலிருந்து கல்விச் சுற்றுலாவை மேற் கொள்வதற்கு ஆயத்தமாகியிருந்த க.பொ. த. மாணவர்கள் சிலரின் பயணப் பொதிகளிலிருந்து சாராயத்துடனான புட்டிகள் கண்டு பிடிக்கப் பட்டதை யடுத்து பாடசாலை அதிபரால் குறித்த பயணம் இரத்துச் செய் யப்பட்ட சம்பவமொன்று கடந்த 28ஆம் திகதி வெள்ளிகி கிழமை பதி வாகியுள்ளது.
கல்விச் சுற்றுலாவை மேற் கொண்டு, திருகோணனலைப் பிர தேசத்திற்குச் செல்வதற்கான ஆயத் தங்களுடன், சுமார் 150 மாணவர்க ளைக் கொண்ட குழுவினர் நான்கு பஸ் வண்டிகளில் அமர்ந்திருந்த நிலையில் பாடசாலையின் அதிபருக்குக் கிடைக்கப் பெற்ற நம்பகமான தகவலொன்றை யடுத்து, மாணவர்க ளின் பயணப் பொதிகள் ஆசிரியர்க ளால் திடீர் பரிசோதனைக் குட்படுத் தப் பட்டன.
இதன்போது, சில மாணவர்களது பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் கால் போத்தல் மற்றும் அரை போத்தல் அளவில் அடைக்கப் பட்ட மதுப் புட்டிகள் கைப்பற்றப் பட்டன.
இச் சம்பவத்தினால் கடும் கோபத்திற்குள்ளான  அதிபர் கல்விச் சுற்றுலாவை உடன் இரத்துச் செய்வதாக அற வித்ததுடன், பஸ் வண்டிகளுக்கான வைப்புக் கட்டணம் தலா 10,000 ரூபா வீதம் 4 பஸ் வண்டிகளுக் கும் செலுத்தி, அவ் வண்டிகளைத் திருப்பி யனுப்பியதாகவும் தெரிவிக் கப் படுகின்றது.
இதற்கு முன்னரும், இதே பாடசா லையின் உயர் வகுப்பு மாணவர்கள் சிலர், சக மாணவரொருவரின் பிறந்த தினத்தையொட்டி பாடசாலை வளாகத்தில் மது அருந்தி போதையில் விழுந்து கிடந்த நிலையில் அதிபரிடம் மாட்டிக் கொண்டதாகவும் தெரியவந்துள்ளது.
இதேவேளை, பயணப் பொதியில் சாராயப் புட் டிகளை வைத்திருந்த குறித்த இம் மாணவர்கள் , எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவிருக்கும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக் குத் தோற்றவிருப்பவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Author: verified_user

0 comments: