நடுவானில் கத்தார் எயார்வெய்ஸ் பைலட்டிற்கு மாரடைப்பு ~ அவசரமாக தரையிறக்கப்பட்ட விமானம்!

Published On Monday, 28 August 2017 | 00:05:00


கத்தார் தலைநகர் தோஹாவிலிருந்து இந்தோனேஷியாவின் பாலி தீவிற்கு (டென்ஸ்பர் விமான நிலையம்) சுமார் 240 பயணிகளுடன் சென்று கொண்டிருந்த கத்தார் ஏர்வேஸ் விமானத்தின் விமானி ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டதால் அவசரமாக இந்தியாவின் ஹைதராபாத் (ஷம்ஷாபாத்) விமான நிலையத்தில் நள்ளிரவு 12.05 மணியளவில் தரையிறக்கப்பட்டது.

மாரடைப்பு ஏற்பட்ட விமானி உடனடியாக ஹைதராபாத் ஜூபிலி ஹில்ஸ் பகுதியில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உடல்நிலை தேறிவருகிறார். இந்நிலையில், கத்தார் ஏர்வேஸ் விமான நிறுவனம் தரையிறக்கப்பட்ட விமானத்தின் பயணிகளை கருத்திற்கொண்டு உடனடியாக மாற்று ஏற்பாடுகளை செய்ததால் அதிகாலை சுமார் 03.03 மணியளவில் மீண்டும் பாலி தீவிற்கு பறந்து சென்றது.

சுமார் 2 மாதங்களுக்கு முன் இதே ஹைதராபாத் விமான நிலையத்திலிருந்து 244 பயணிகளுடன் ஹாங்காங் புறப்பட்ட கேத்தே பசிபிக் விமானம் ஒன்றின் மீது பறவை மோதியதால் ஏற்பட்ட சேதத்தை தொடர்ந்து சில நிமிடங்களிலேயே மீண்டும் ஹைதராபாத் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்ட சம்பவத்திற்கு பின் நிகழ்ந்துள்ள சம்பவம் இது.

Source: Hindustan Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved