உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம்!

Published On Tuesday, 8 August 2017 | 15:00:00

உலக சந்தையில் தங்கத்தின் விலையில் திடீர் மாற்றம் ஏற்பட்டுள்ளதுடன், நேற்றைய தினம் தங்கத்தின் விலை குறைவடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, நேற்று ஒரு அவுன்ஸ் தங்கத்தின் விலை 1,257 அமெரிக்க டொலராக பதிவாகியுள்ளது.
இது கடந்த இரண்டு வாரங்களில் பதிவான குறைந்த பட்ச விலை என குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க டொலரின் பலவீனமே தங்கத்தின் விலை குறைவுக்கு காரணம் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
உலக சந்தையில் தங்கத்தை அவுன்ஸ் கணக்கில் விலை சொல்வார்கள். ஒரு அவுன்ஸ் என்பது 32 கிராம், அதாவது நான்கு பவுண். இது 24 கரட் சொக்கத் தங்கம் ஆகும்.
இலங்கையில் இன்றைய தினத்தில் தங்கத்தின் விலை நிலவரம்..
தங்கம் அவுன்ஸ் - 193,695 ரூபா
24 கரட் ஒரு கிராம் தங்கம் - 6,840 ரூபா
24 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) - 54,700 ரூபா
22 கரட் 1 கிராம் தங்கம் - 6,270 ரூபா
22 கரட் 8 கிராம் தங்கம் (1 Pawn) - 50,200 ரூபா
21 கரட் 1 கிராம் தங்கம் - 5,990 ரூபா
21 கரட் 8 கிராம் (1 Pawn) - 47,900 ரூபா
இலங்கை நிலவரப்படி கடந்த 4ஆம் திகதி தங்கம் அவுன்ஸ் 195,067 ரூபாவாக காணப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved