லெபனானில் பணிபுரியும் இலங்கையர்களுக்கு மகிழ்ச்சியான செய்தி! சந்தர்ப்பத்தை தவற விடாதீர்கள்

Published On Wednesday, 23 August 2017 | 17:29:00

உரிய ஆவணங்கள் இன்றி தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்கள் - சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.

லெபனானில் உரிய ஆவணங்கள் இன்றி தொழில்புரிந்து வருகின்ற இலங்கையர்களை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான வசதிகளை ஏற்படுத்தவிருப்பதாக, அந்த நாட்டின் பிரதமர் சாட் ஹரீரி தெரிவித்துள்ளார். 

லெபனானுக்கான விஜயத்தை மேற்கொண்டுள்ள ராஜாங்க வெளிவிவகார அமைச்சர் வசந்த சேனாநாயக்க, அந்த நாட்டுப் பிரதமரை சந்தித்திருந்தார். 

இதன்போது அவர் இந்த விடயத்தைக் கூறியுள்ளார். 

இந்த சந்திப்பின் போது, ராஜதந்திர விடயங்கள் மற்றும் இடம்பெயர்ந்து பணிப்புரிவோர் தொடர்பிலும் அதிக அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. 

மேலும் வர்த்தக, பொருளாதார, சமுககலாசரம் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved