கத்தார் மற்றும் துருக்கி இராணுவங்கள் இன்று கூட்டுப் பயிற்சியில்...!

Published On Monday, 7 August 2017 | 22:47:00

கத்தாருக்கு எதிரான ராஜதந்திர முட்டுக்கட்டை கள் தொடரும் நிலையில் துருக்கி மற்றும் கத்தார் நாடுகள் இணைந்து கூட்டு இராணுவ பயிற்சியில் ஈடுபட்டுள்ளது.

மத்திய கிழக்கின் மிகப்பெரிய அமெரிக்க இராணுவ தளம் கத்தாரில் அமைந்திருக்கும் நிலையில் துருக்கியும் இராணுவ தளம் ஒன்றை இயக்கி வருகிறது.
இந்நிலையில் சவூதி கூட்டணி நாடுகளால் கத்தார் தனிமைப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அங்கு மேலும் இராணுவத்தையும், இராணுவ உபகரணங்களையும் துருக்கி அனுப்பி வைத்திருந்த நிலையில் நேற்று கூட்டு இராணுவ பயிற்சி இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(Mohamed Hasil)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved