வரலாறு காணத வெப்ப நிலை உயர்வு சீனாவில் - பெரும் அசௌகரியத்தில் மக்கள்

Published On Monday, 7 August 2017 | 16:02:00

சீனாவில் வரலாறு காணாத அளவிற்கு வெப்பநிலை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த வெப்ப நிலை அதிகரிப்பால் மக்கள் பெரும் அசௌகரியங்களை எதிர்நோக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சீனாவின் ஷான்ஸி மாநிலத்தில் மட்டும் நேற்றைய தினம் 40 பாகை செல்சியஸ் வெப்பநிலை பதிவு செய்யப்பட்டதாகவும் வெப்பறிலை தற்போது படிப்படியாக அதிகரித்து செல்கின்றதாகவும் வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
சீனாவின் வடக்கு மற்றும் மத்திய பகுதிகளில் வெப்பநிலை 40 மற்றும் 50 பாகை செல்சியஸ் ஆக காணப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த நிலைமை தொடர்பில் கருத்து தெரிவித்த சீன வானிலை ஆராய்ச்சியாளர் ஒருவர், நிலவி வரும் இந்தக் கடும் வெப்பநிலை எதிர்வரும் மூன்று நாட்களுக்கு தொடரலாம் என எதிர்வு கூறியுள்ளார்.
அத்துடன் பொதுமக்களை கவனமாக இருக்குமாறும் வெளியிடங்களுக்கு செல்வதை தவிர்க்குமாறும் தெரிவித்துள்ளார்.
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved