Tuesday, 8 August 2017

மகிழ்ச்சியான செய்தி! கத்தருக்கு வான் வழியை தற்காலிமாக திறந்த பஹ்ரைன்!

கத்தர் ஏர்வேய்ஸ் நிறுவனத்தின் விமானங்களுக்கு பெஹ்ரைன் தன் வான்வழியைத் தற்காலிகமாக திறந்துவிட்டுள்ளது.
தம் நாட்டு விமானங்கள் பறக்க சவூதி, யூ ஏ ஈ, பெஹ்ரைன் மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் விதித்த தடையினை எதிர்த்து சர்வதேச பொது விமானப் போக்குவரத்து அமைப்பிடம் கத்தர் முறையீடு செய்திருந்தது.
இதனைத் தொடர்ந்து கடந்த வாரம் ஐக்கிய நாடுகள் சபையின் விமான போக்குவரத்து நிறுவன குழு தலைமையில் நடந்த பேச்சுவார்த்தையில் எடுக்கப்பட்ட முடிவின்படி பெஹ்ரைன் தற்போது தற்காலிகமாக கத்தர் விமானங்களுக்கு தம் வான்வழியினைத் திறந்துவிட்டுள்ளது. இதற்கான அறிவிப்பினைச் சர்வதேச பொது விமானப்போக்குவரத்து நிறுவன சபை வெளியிட்டுள்ளது.
இந்தத் தற்காலிக அனுமதி நவம்பர் மாதம் 9 வரை செயல்பாட்டில் இருக்கும் எனவும் கத்தரினுள் வரும் விமானங்களுக்கு மட்டும் இந்த அனுமதி எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதே போன்று கத்தர் விமானங்களுக்கு மற்றொரு தற்காலிகப் பாதையினைத் திறப்பதற்கும் ஒப்பந்தம் ஆகியுள்ளது. இம்மாதம் ஆகஸ்ட் 17 முதல் திறக்கப்படவுள்ள அப்புதிய வான்வழித்தடம் குறித்த விவரம் இதுவரை வெளியிடபபடவில்லை. அநேகமாக சவூதி அல்லது யூ ஏ ஈ வான்வழித் தடமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
கத்தருக்கு எதிராக சவூதி முதலான நாடுகள் எடுத்த எதேச்சதிகாரமான, அடிப்படையற்ற நடவடிக்கை நாளுக்கு நாள் நீர்த்து வருகிறது. இப்பிரச்சனையில் கத்தரின் பக்க நியாயம் வெல்லும் வாய்ப்புகள் பிரகாசமாக தென்படுகின்றன.
(Abdur Rahman)

Author: verified_user

0 comments: