Breaking News

நாட்டின் பல பகுதிகளில் அடைமழை! மீண்டும் மண்சரிவு அபாய எச்சரிக்கை

நாட்டின் பல பகுதிகளிலும் நேற்று இரவு பெய்துள்ள அடைமழையினால் மண்சரிவு ஏற்படும் அபாயம் இருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.
இரத்தினபுரி, காலி மாவட்டங்களில் குறிப்பாக குருவிட்ட, எரத்ன, அடவிகந்த, தெவிபஹல, அதிரியவெல, சுதாகல, கீரகல, தந்தெனிய உள்ளிட்ட பிரதேசங்களில் மண்சரிவு அபாயம் ஏற்பட்டுள்ளதாக கட்டட ஆராய்ச்சி நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த நிலையில் அபாயம் நிலவும் பிரதேசங்களில் உள்ள மக்களுக்கு இது பற்றி முன்னறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், தென் மாகாணத்தில் மாத்திரமன்றி கிழக்கு, ஊவா மாகாணங்களிலும் சில இடங்களில் அடைமடை பெய்திருக்கிறது. சில இடங்களில் மழை வீழ்ச்சி 75 மில்லி மீற்றரைத் தாண்டி பதிவாகியுள்ளது.
நாட்டில் அண்மையில் ஏற்பட்ட அசாதாரண காலநிலையினால் 8 மாவட்டங்களுக்கு அனர்த்த எச்சரிக்கை விடுக்கப்பட்டதுடன், பல பகுதிகளிலும் ஏற்பட்ட மண்சரிவு மற்றும் வெள்ளம் காரணமாக 200க்கும் மேற்பட்ட மக்கள் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் மீண்டும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மக்கள் மத்தியில் ஒரு வித அச்சம் ஏற்பட்டுள்ளதை அவதானிக்க முடிகின்றது.

No comments