கட்டாரில் இருந்து விடுமுறைக்கு வந்தவர், தூக்கிட்டு தற்கொலை! வவுனியாவில் சோகம்!

Published On Sunday, 20 August 2017 | 00:13:00

வவுனியா, சமயபுரம் அம்மன் கோவிலுக்கு அருகிலுள்ள வீட்டின் மாமரத்திலிருந்து இளைஞன் ஒருவர் தூக்கில் தொங்கிய நிலையில் இன்று -19- காலை  சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் குறித்து மேலும் தெரியவருகையில்,

வவுனியா, சமயபுரம்  அம்மன் கோவிலுக்கு அருகில் வசித்து வரும் மாரிமுத்து பிரசாந்தன் எனும் 26 வயதுடைய இளைஞன் இன்று காலை அவரது வீட்டிலுள்ள மாமரத்தில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார். 

கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்னரே கட்டார் நாட்டிலிருந்து விடுமுறையில் வீட்டிற்கு வந்துள்ளார்.

குறித்த சம்பவம் தொடர்பாக  மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved