வீடியோ இணைப்பு - நடுவானில் தத்தளித்த விமானம் - பதறிய பயணிகளின் உயிரைக்காத்த ஹீரோ (

Published On Wednesday, 2 August 2017 | 17:53:00

துருக்கியில் நடுவானில் ஆலங்கட்டி மழையில் சிக்கி சேதமடைந்த விமானத்தை பத்திரமாக தரையிறக்கி 127 உயிர்களை காப்பாற்றிய விமானியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.
127 உயிர்களை காப்பாற்றிய துருக்கி நிறுவனத்தில் பணியாற்றி வரும் கேப்டன் அலெக்சாண்டர் அகோபோவின் தைரியத்தை பாராட்டி உக்ரைனின் உயரிய விருது வழங்கப்பட்டுள்ளது.
துருக்கியில் இடி மின்னலுடன் பலத்த காற்றுடன் மழை பொழிந்து வரும் நிலையில் விமானி அலெக்சாண்டர் அகோபோவ் 121 பயணிகள், 6 விமானக் குழுவினருடன் A320 விமானத்தை இயக்கியுள்ளார்.
இந்நிலையில், நடுவானில் ஆலங்கட்டி மழை, பயங்கர காற்றில் சிக்கி விமானம் பயங்கர சேதமடைந்துள்ளது. விமானத்தின் முன் பகுதி மற்றும் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்துள்ளது.
இதனால், விமானத்திலிருந்த பயணிகள் உயிர் பயத்தில் பதறியுள்ளனர். ஆனால், தைரியமாக விமானத்தை இயக்கிய விமானி அலெக்சாண்டர், இஸ்தான்புல் நாட்டின் Ataturk விமான நிலையத்தில் பத்திரமாக விமானத்தை தரையிறக்கியுள்ளார்.
சேதமடைந்த விமானத்தை விமானி அலெக்சாண்டர், விமான நிலையத்தில் தரையிறக்கிய காட்சிகள் இணையத்தில் வெளியாகியுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved