உலக தடகள சாம்பியன்ஷிப் (World Athletics Championships) யில் கத்தார் தங்கம் வென்று சாதனை படைத்தது.!

Published On Wednesday, 16 August 2017 | 16:39:00

இங்கிலாந்து நகரில் இடம்பெற்ற உலக தடகள செம்பியன்ஷிப் போட்டியில் கத்தாரின் பிரபல உயரம் பாய்தல்  வீரர் முதாஸ் ஈஸா பர்சிம் (Mutaz Essa Barshim's) தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

இரண்டு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும்  மேற்படி தடகள விளையாட்டுப் போட்டிகள் கடந்த இரு வாரங்களாக 3ம் திகதி முதல் 13ம் திகதி வரை லண்டன் நகரில் இடம்பெற்றன. 

மேற்படி  போட்டியில் பங்கு பற்றி கத்தாரில் பிரபல வீரர் தங்கம் வென்று நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ளார். அவர் 2.35 மீற்றர் உயரம் பாய்ந்து இந்த வெற்றியைப் பெற்றுள்ளதோடு அவரின் சிறந்த உயரம் பாய்தல் பெறுமதி 2.43 மீற்றர் ஆகும்.  உலக சாதனையாக இருக்கும் 2.45 மீற்றருக்கு அடுத்த இடத்தில் இருப்பது இவராகும். 

மேலும் இவர் கடந்த ஒலிம்பிக் போட்டியின் போது உயரம் பாய்தலில் வெள்ளிப்பதக்கத்தையும், அதற்கு முன்னா் இடம்பெற்ற ஒலிம்பிக் போட்டியில் வெண்கலப் பதக்கத்தையும் பெற்று கத்தாருக்கு பெருமை சேர்த்திருந்தார். இவரின் தற்போதைய வயது 26 வருடங்கள் மட்டுமேயாகும்.

மேற்படி லண்டன் போட்டியில் தான் உலக அதிவேக ஓட்ட வீரம் ஜமெய்காவின் உசேன் போல் 100 மீற்றர் போட்டியில் அமெரிக்காவின் ஜோசப் கெட்லினிடம் தோல்வி கண்டு பின்னர் ஓய்வு பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved