Tuesday, 15 August 2017

கத்தாரிலிருந்து ஹஜ் செய்ய இருப்போரின் நலன் கருதி வான் மற்றும வரை வழியை அனுமதிக்க கோரிக்கை!

கத்தரிலுள்ளோருக்கு ஹஜ் பயணம் செய்ய தரை மற்றும் விமானவழி அனுமதிக்க வேண்டுமென கத்தர் மனித உரிமை ஆணையம் கோரிக்கை விடுத்துள்ளது.
ஹஜ் பயணம் மேற்கொள்வோரைத் தடுப்பதும் அவர்களுக்குரிய வசதியைச் செய்து கொடுக்காமல் அலைகழிப்பதும் தனிமனித வழிபாட்டு உரிமைக்கு எதிரானது. தனிமனித உரிமைகள் பேணும் சர்வதேச உரிமைகள் சட்டத்துக்கும் இது எதிரானது.
அரசியல் காரணங்களுக்காக நாடுகள் மேற்கொள்ளும் பழிவாங்கும் நடவடிக்கைகள், தனி மனித சுதந்திரத்தை ஒருபோதும் பாதிக்கக்கூடாது என ஜெனிவா சர்வதேச உரிமை ஒப்பந்தம் கூறுகிறது. இதற்கு எதிராக செயல்படும் சவூதியின் செயல்பாடு கண்டனத்துகுரியது.
எனவே, கத்தரிலிருந்து ஹஜ் செய்வதற்காக தரை மற்றும் வான் வழியினைச் சவூதி உடனடியாக திறக்க வேண்டும் என கத்தர் மனித உரிமை ஆணைய தலைவர் அலி அல்மர்ரி கோரிக்கை விடுத்துள்ளார்.

Author: verified_user

0 comments: