உலக அதிவேக ஓட்ட வீரர் உசய்ன் போல்ட்டை வென்று உலக சாம்பியன் பட்டம் வென்றார் கட்லின்

Published On Sunday, 6 August 2017 | 09:41:00

அமெரிக்காவின் ஜஸ்டின் கட்லின் ஜமைக்காவின் உசய்ன் போல்ட்டை வென்று 100 மீட்டர் ஓட்டப் பந்தய உலக சாம்பியன்ஷிப்பை தட்டிச் சென்றார்.

போல்ட்டின் போட்டியாளராக இருந்து வந்த கட்லின் 2006 முதல் 2010 ஊக்க மருந்து குற்றச்சாட்டில் போட்டிகளில் பங்கேற்பதிலிருந்து தடை செய்யப்பட்டிருந்தார். 

லண்டன் போட்டியுடன் தான் ஓய்வு பெறுவதாக போல்ட் அறிவித்திருந்தார். நேற்றைய போட்டியில் கட்லின் 100 மீட்டர் தூரத்தை 9.92 விநாடிகளிலும், அவரது சக வீரரான கிறிஸ்டியன் கோல்மேன் 9.94 விநாடிகளிலும் முதல் இரண்டு இடங்களைப் பெற போல்ட் 9.95 விநாடிகளில் மூன்றாம் இடத்திற்கு வந்தார். 

“என்னால் வெற்றியுடன் எனது தடகள வாழ்க்கையை முடிக்க முடியாததற்கு வருந்துகிறேன்” என்றார் போல்ட். விளையாட்டுப் போட்டிகளில் எப்போதெல்லாம் கட்லின் களத்தில் நின்றாரோ அப்போதெல்லாம் ரசிகர்கள் அவரை கேலி செய்யும் விதமாக ஒலிகளை எழுப்பி வந்தனர். ஆனால் 35 வயதாகும் கட்லின் இப்போதும் வெற்றிகளை ஈட்டுகின்ற மனிதராக இருக்கிறார். 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved