Friday, 18 August 2017

துபாயில் மஸாஜ் விளம்பர பேர்வழிகளுக்கு விரைவில் ஆப்பு !


துபாய் மாநகரம் சந்தித்து வரும் முக்கிய தொல்லைகளில் ஒன்று ஆபாச புகைப்படங்களை சுமந்த மஸாஜ் விளம்பர கார்டுகள். இவை சகட்டுமேனிக்கு மக்கள் அதிகம் புலங்கும் இடங்களில் இரைக்கப்படுவதுடன் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களின் கண்ணாடியை சுற்றி நூற்றுக்கணக்கில் சொருகியும் வைத்திருப்பார்கள்.

இந்த அயோக்கியர்கள் மஸாஜ் என்ற பெயரில் நடத்தும் பலான தொழிலுக்கே என்ற விமர்சனமும் மக்கள் மத்தியில் உண்டு இப்படி விளம்பரம் செய்து அழைக்கின்றனர் என மக்கள் பேசிக்கொள்வர் மேலும் இவர்கள் மீது அரசு நடவடிக்கை எடுக்காத என ஏங்கியும் வந்தனர்.

மக்களின் ஏக்கத்திற்கு விடையாக தற்போது துபை மாநகராட்சி இத்தகைய அயோக்கியர்கள் மீது நடவடிக்கை எடுக்கத் துவங்கியுள்ளது. அதன்படி இனி வீட்டு வாசல்களிலும், கார்களின் மீதும் இந்த மஸாஜ் விளம்பரக் கார்டுகளை போடுவோர் மீது 10,000 திர்ஹம் அபராதமும், லைசென்ஸ் ரத்துடன் ஒரேயடியாக நாடு கடத்தவும் திட்டமிட்டுள்ளனர்.

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்

Author: verified_user

0 comments: