கூடுதலாக கேட்ட உப்புக்கு கட்டணம் அறவிட்ட ஹோட்டல் - ஹைதராபாத்தில் சம்பவம்

Published On Saturday, 26 August 2017 | 16:05:00

ஹைதராபாத்தில் உள்ள ஓட்டல் ஒன்றில் வாடிக்கையாளர் கூடுதலாக கேட்ட உப்புக்கு கட்டணம் வசூல் செய்யப்பட்டுள்ளது.

ஹைதராபாத் நகரில் ராஜ்பவன் சாலையில் உள்ள ஹோட்டல் ஒன்றில் அவினாஷ் சேதி என்பவர் தனது குடும்பத்துடன் இரவு உணவு சாப்பிட சென்றுள்ளார். 

உணவுக்கு முன் எலுமிச்சை பழரசம் கேட்டுள்ளார்;. அதில் உப்பு குறைவாக இருந்துள்ளது. இதனல் அவர் சிறுது உப்பு சேர்க்கும்படு கேட்டுள்ளார்.

அனைவரும் சாப்பிட்ட பின் பில் வந்துள்ளது. பில்லை பார்த்து அவினாஷ் அதிர்ச்சி அடைந்துள்ளார். அந்த பில்லில் கூடுதலாக வழங்கப்பட்ட உப்புக்கு 1 ரூபாய் கட்டணம் சேர்க்கப்பட்டு இருந்தது. 

அந்த பில்லை அவர் இணையத்தில் பதிவேற்ற அது வேகமாக சமூக வலைதளங்களில் வைரலாக பரவி பரபரப்பை ஏற்படுத்தியது.

இது தவறுதலாக நடந்துவிட்டது. எங்கள் ஹோட்டலில் தற்போதுதான் புதிய சொப்ட்வேரை பயன்படுத்த ஆரம்பித்துள்ளோம். அதில் ஏற்பட்ட தவறால் உப்புக்காண கட்டணம் சேர்ந்துள்ளது என ஹோட்டல் நிர்வாகத்தினர் தெரிவிக்கின்றனர்.

ஹோட்டல் நிர்வாகத்தினர் சொன்ன காரணம் ஏற்றுக்கொள்ளும் படிஇல்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் ஹோட்டல் நிறுவனம் அவினாஷ் சாப்பிட்ட உணவுக்கான பில் தொகையை திருப்பித்தர முன்வாந்தது. ஆனால் அவினாஷ் அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved