Wednesday, 2 August 2017

சவூதியிலிருந்து வந்து இலங்கை விமான நிலையத்தில் உயிழிழந்தவர் இவர் தான்! விபரம் வெளியானது!

கும்புக்கந்துறை பள்ளிவாசல் வட்டாரத்தைச் சேர்ந்த வரும் 1998 ம் ஆண்டு முதல் சவூதி அரேபியாவின் ஜித்தா நகரில் வசித்து வரும், ஜனாப் அபூபக்கர் (சுமார் 45 வயது ) அவர்கள் இன்று காலை (கட்டுநாயக்கா விமான நிலையத்தை அடைந்த பின்னர்  மாரடைப்பு காரணமாக)  காலமானார்.

சவுதி அரேபியாவில் இருந்து இலங்கைக்கு அதிகாலை 04.20 அளவில் வந்த விமானத்தின் மூலமே அவர் நாட்டை வந்தடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவர் சித்தி பவ்சியா , மர்ஹூம் அப்துல் வாஹித்  தம்பதியின் மகனும், லரீப், உபைதுல்லாஹ்,மகீன், ஸாஹிரா,ஷபீகா ஆகியோரின் சகோதரரும்,  பாத்திமா  ரிபானாவின் ( பங்காராமம்)  அன்புக் கணவரும். ஸம்ஹா ,ராணா, ஹம்தான்க ஆகியோரின் அன்புத் தந்தையும், மடவள பஸார் ஷபீக் நாகூர் பிச்சை அவர்களின் மைத்துனருமாவார்.

Author: verified_user

0 comments: