ஹஜ் யாத்திரிகர்களுக்காக தரைவழியை அனுமதித்ததை மனதார வரவேற்கின்றோம் - கத்தார் அறிவிப்பு!

Published On Saturday, 19 August 2017 | 15:14:00

கத்தார் ஹஜ் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிகளை சவூதி அரேபியா திறந்து கொடுத்துள்ளதைக் கத்தார் வரவேற்றுள்ளது.

கத்தார் மீதான தடையினைத் தொடர்ந்து வான், கடல் மற்றும் தரை வழிகளை சவூதி அரேபியா மூடியதால், கத்தரிலிருந்து ஹஜ் பயணம் செல்வதற்கும் தடை ஏற்பட்டது. தனி மனித வழிபாட்டு உரிமையை இது பறிக்கும் செயல் எனவும் ஹஜ் பயணிகளுக்குப் பாதையினைத் திறக்க வேண்டுமெனவும் கத்தர் ஹஜ் பயணிகளுக்குப் பாதுகாப்பினை சவூதி உறுதிபடுத்த வேண்டுமெனவும் கத்தர் கோரிக்கை விடுத்திருந்தது.

இதற்குச் சவூதி எவ்வித பதிலும் கொடுக்காத நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் பாதுகாப்பு கழகத்தில் கத்தார் புகார் அளித்தது. தனிமனித வழிபாட்டு உரிமையினைப் பறிப்பது தனிமனித சுதந்திரத்துக்கு எதிரானது என்றும் சர்வதேச ஜெனிவா மாநாட்டு ஒப்பந்தத்துக்கு எதிரானது எனவும் அப்புகார் மனுவில் குறிப்பிட்டிருந்தது.

இந்நிலையில், கத்தரிலிருந்து ஹஜ் பயணம் மேற்கொள்ள விரும்பும் பயணிகளுக்கு விமானம் மற்றும் தரை வழிபோக்குவரத்து திறந்து கொடுக்கப்படும் என சவூதி அரேபியா அறிவித்தது.

இந்த அறிவிப்பினை வரவேற்றுள்ள கத்தர், கத்தரிலிருந்து பயணம் மேற்கொள்ளும் ஹஜ் பயணிகளுக்கு எவ்வகையிலான பாதுகாப்பு நடவடிக்கைகளை சவூதி மேற்கொண்டுள்ளது என்பதையும் தெளிவுபடுத்த வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளது.

மேலும், கத்தார் மீதான நியாயமற்ற தடையினை நீக்குவதற்கான ஆரம்ப நிலையாக இது அமையும் எனவும் நம்பிக்கை தெரிவித்துள்ளது.
(ABDUR RAHMAN)
Share this article :






0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved