இந்தியாவில் திருமணம் செய்துக்கொண்ட இரண்டு ஆண்கள்.. கிளம்பியது சர்ச்சை

Published On Sunday, 6 August 2017 | 00:17:00

இந்தியாவில் இரண்டு ஆண்கள் திருமணம் செய்துக்கொண்ட சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது.
கடந்த 3ம் திகதி மத்திய பிரதேச மாநிலம், இந்தூர் நகரத்திலே இத்திருமணம் நடந்துள்ளது. அஹிர்வர் மற்றும் ராகேஷ் அதாஜா ஆகியோரே இவ்வாறு திருமணம் செய்துக்கொண்டுள்ளனர்.
மழை வேண்டி கடவுளிடம் வழிபாடு செய்யும் முயற்சியாகவே இருவரம் திருமணம் செய்து கொண்டதாகவும், திருமணத்திற்கு பின் இருவரும் அவர்களின் மனைவியுடன் வாழ்ந்து வருவதாக திருமணத்தை ஏற்பாடு செய்த ரமேஷ் சிங் தோமர் என்பவர் தெரிவித்துள்ளார்.
திருமணம் நடந்துக்கொண்டிருந்த போதே மழை பொழிந்ததால் வருகை வந்திருந்தவர்கள் அனைவரும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். திருமணத்திற்கு பிறகு தொடர்ந்து இரண்டு நாட்களாக மழை பொழிந்து வருவதால் மக்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.
எனினும், இந்த திருணம் ஓரினச் சேர்க்கை திருமணம் என LGBTQ என்ற பத்திரிகை குற்றம்சாட்டி செய்தி வெளியிட்டுள்ளது.
இந்தியாவில் ஓரினச் சேர்க்கை திருமணம் தற்போது வரை குற்றம் என்பதால் சமூக வலைதளங்கில் இது உண்மையான ஓரினச் சேர்க்கை திருமணமா என சந்தேகம் எழுந்துள்ளது.
தொடர்ந்து இந்த திருமணம் ஓரினச் சேர்க்கை என குற்றம்சாட்டி வரும் LGBTQ பத்திரிகை, இந்தூர் அமைந்துள்ள பகுதியில் யூன் 1ம் திகதி முதல் ஆகஸ்ட் 8ம் திகதி வரை மழைக்காலம் என முன்னதாகவே வானிலை ஆய்வு மையத்தின் படி அறிவித்திருந்ததை குறிப்பிட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved