பரபரப்புச் சம்பவம் - மனைவி அடித்துக்கொலை செய்த கட்டிட மேஸ்திரி! குற்றவாளியைத் தேடி போலீஸ் வலைவீச்சு

Published On Tuesday, 1 August 2017 | 13:56:00

கிருஷ்ணகிரியில் குடும்ப தகராறில் மனைவியை அடித்துக் கொலை செய்த கட்டிட மேஸ்திரியை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.

கிருஷ்ணகிரி ராஜாஜி நகர் 6-வது குறுக்குத்தெருவில் வசித்து வருபவர் முனியப்பன் (வயது 56), கட்டிட மேஸ்திரி. இவரது மனைவி அமுதா (45). இவர்களுக்கு ரேவதி (20) என்ற மகள் உள்ளார். கணவன்-மனைவிக்கு இடையே குடும்ப தகராறு இருந்து வந்தது. நேற்று காலை வழக்கம் போல முனியப்பனுக்கும், அவரது மனைவி அமுதாவிற்கும் இடையே குடும்ப தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றி கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த முனியப்பன் கட்டையால் அமுதாவை அடிக்க முயன்றார். அப்போது தடுக்க வந்த மகள் ரேவதியை கீழே தள்ளி விட்ட முனியப்பன், அமுதாவை கட்டையால் சரமாரியாக தாக்கி விட்டு தப்பி ஓடி விட்டார். இதில் பலத்த காயம் அடைந்த அமுதா சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் துடிதுடித்து இறந்தார்.

இந்த கொலை குறித்து அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் கிருஷ்ணகிரி துணை போலீஸ் சூப்பிரண்டு ரவிக்குமார், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்புமணி மற்றும் போலீசார் அங்கு விரைந்து சென்று கொலை செய்யப்பட்ட அமுதாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கிருஷ்ணகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த பயங்கர கொலை தொடர்பாக தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய கட்டிட மேஸ்திரி முனியப்பனை வலைவீசி தேடி வருகிறார்கள்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved