எச்சரிக்கை! இப்படி உங்களுக்கும் நடக்கலாம் - சவூதி விமான நிலையத்தில் கைது செய்யப்பட்ட இந்தியக் குடும்பம்!

Published On Saturday, 5 August 2017 | 09:13:00


வளைகுடா நாடுகளில் நிகழும் பல பிரச்சினைகளை கண்கூடாக பார்த்தும் ஏன் இந்த தவறை நமது உறவுகள் செய்கிறார்கள் என்று தெரியவில்லை.சவுதியிலிருந்து நேற்று தாயகம் திரும்பிய​ ஒரு இந்திய குடும்பம் மீண்டும் ஜித்தா விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டனர். சவுதி இந்திய சமூக ஆர்வலர்கள் முயற்ச்சியால் தாய் குழந்தை விடுவிக்கப்பட்டுள்ளார்கள்.

இதன் விபரம் வருமாறு நேற்று சவுதி ஜித்தா விமான நிலையம் வழியாக தாயகம் திரும்ப இருந்த இந்திய குடும்பமான கணவன் மனைவி 2 1/2 வயது குழந்தை தங்களுடைய பொருட்களை முன்கூட்டியே விமான நிலையத்தில் கார்கோ பிரிவில் தங்களுடைய லக்கேஜ்​ அதிகமான இருந்ததால் ஒரு ஏஜெண்ட் மூலம் முன்கூட்டியே கொடுத்து விட்டு தங்கள் பயண ஆவணங்களை பெற்று தங்கள் குடியிருப்புக்கு திரும்பினர்.

சிறிது நேரத்தில் விமான நிலையத்திலிருந்து அழைப்பு வந்துள்ளது. இதையடுத்து அவர் விமான நிலையத்தில் சென்றபோது அவருடைய Extra லக்கேஜ் அனுப்ப உதவுவதாக சொன்ன ஏஜெண்ட் அவருக்கு தெரியாமல் 2 1/2 கிலோ தங்கத்தை அவருடைய உடைமையில் மறைத்து வைத்திருந்தது தெரியவந்துள்ளது.

இதையடுத்து அதிர்ச்சி அடைந்த அந்த நபர் என்ன செய்வது என்று தெரியாமல் திகைத்து நின்றார். 
இதையடுத்து சவுதி அரேபியா இந்திய சமூக ஆர்வலர்கள் சிலர் முயற்சி மூலம் அவர் நிரபராதி என்பதை உறுதுிப்படுத்தி குழந்தை மற்றும் அவருடைய மனைவியை தாயகம் அனுப்பு வைத்தனர்.


இவர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டது. இதையடுத்து அவர் தாயகம் திரும்ப முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. 
இந்த வழக்கு முடிந்த பிறகு மட்டும் இவர் தாயகம் திரும்ப முடியும். இவரை ஏமாற்றி நபரை கண்டறியும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.


இது வளைகுடாவில் நாடுகளில் உள்ள அனைத்து நண்பர்களுக்கும் பொருந்தும் தயவு செய்து விமான நிறுவனம் அனுமதி செய்யும் எடைகளை மட்டுமே எடுத்து வாருங்கள். நீங்கள் அங்கிருந்து​ எடுத்து வரும் அனைத்து பொருட்களும் தாயகத்திலும் கிடைக்கும். 
இப்படி Extra லக்கேஜ் அனுப்ப சில சட்டத்திற்கு புறம்பான முயற்சி செய்யும் நபர்களுக்கு இந்த நிலைமைதான் வரும்.

(குவைத் தமிழ் பசங்க)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved