Wednesday, 2 August 2017

இந்தியா செல்லும் இலங்கையர்களுக்கு முக்கிய அறிவித்தல்!

நாட்டிலிருந்து பல்வேறு தேவைகளுக்காக விடுமுறைக் காலத்தில் இந்தியா செல்வதற்கு முன்னர் தத்தமது பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி பணிமனையில் ஆலோசனை பெற்றுச்செல்லுமாறு சுகாதாரப் பகுதியினர் அறிவித்துள்ளனர்.
இந்திய நாட்டில் மலேரியா மற்றும் போலியோ போன்றன எமது நாட்டைப்போன்று முற்றாக ஒழிக்கப்படாததால் அங்கு செல்பவர்கள் அந்த நோயினால் பாதிக்கப்பட கூடிய அபாயம் காணப்படுகிறது.
இதன் காரணமாக இந்தியா செல்லும் முன்னர் தத்தமது பிரதேசத்தில் உள்ள சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் ஆலோசனை பெற்றுச் செல்லுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது எனத் தெரிவிக்கப்பட்டது.

Author: verified_user

0 comments: