அமெரிக்காவுடன் போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ள கட்டார் (படங்கள்)

Published On Thursday, 24 August 2017 | 14:40:00

கட்டார், அமெரிக்காவுடன் இணைந்து அண்மையில் கூட்டு போர் பயிற்சியில் ஈடுப்பட்டுள்ளது.

இதன்போது அமெரிக்காவிற்கு சொந்தமான சி-130 என்ற போர் விமானத்தில் இருந்து பராசூட் மூலம் குதித்து 50 வீரர்கள் பயிற்சி மேற்கொண்டுள்ளனர்.

கட்டார் மற்றும் அமெரிக்கவிற்கு இடையேயான உறவை பலப்படுத்தவே இந்த போர் பயிற்சியை மேற்கொண்டிருந்தாக, கட்டாரிற்கான அமெரிக்க தூதுவர் பிரதானி கேர்னல் டேவிட் கேஸி தெரிவித்துள்ளார்.

வளைகுடா நாடுகள் சில கட்டார் உடனான இராஜதந்திர உறவுகளை இடை நிறுத்தியிருந்த பின்னர் கடந்த ஜுன் மாதத்திலும் இவ்வாறான போர் பயிற்சியில் இருநாட்டு வீரர்களும் கலந்துக்கொண்டிருந்ததாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை வளைகுடா நாடுகள் சில கட்டார் உடனான இராஜதந்திர உறவுகளை இடை நிறுத்தி 70 நாட்கள் கடந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.


Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved