Thursday, 3 August 2017

இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புத்தளம் பிராந்தியத்துக்கான வியாபார ஊக்குவிப்பு அதிகாரியாக - இப்ளால் அமீன்

எம்.யூ.எம். சனூன்


இலங்கை கைத்தொழில் அபிவிருத்திச் சபையின் புத்தளம் பிராந்தியத்துக்கான வியாபார ஊக்குவிப்பு அதிகாரியாக, புத்தளம் நகரைச் சேர்ந்த இப்ளால் அமீன், கடந்த (01) முதல் நியமனம் பெற்றுள்ளார். 

கைத்தொழில், வர்த்தக துறை அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் உத்தரவுக்கமைய, நாடாளுமன்ற உறுப்பினர் எம்.எச்.எம் நவவியின் வழிகாட்டலோடு, தமது பணிகளை முன்னெடுத்துச் செல்லவுள்ளதாக, இப்ளால் அமீன் தெரிவித்தார்.

அத்துடன், தமக்கு வழங்கப்பட்டுள்ள இந்தப் பணியை, நடுநிலையாகச் செய்து முடிக்க உறுதி பூண்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

புத்தளம் பிதேச செயலகம் உள்ளடங்களாக ஏனைய பிரதேசங்களின் வியாபார தொழில் முயற்சிகளை முன்னேற்றுவது, அரச மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களை நாடி உதவிகளைப் பெற்றுகொடுப்பது போன்றன, இவரது பதவியின் பிரதான நோக்கங்களாகும்.

Author: verified_user

0 comments: