Breaking News

மனைவியின் கையை துண்டாக வெட்டிய சலூன் கடைக்காரர் கத்தியுடன் போலீசில் சரண் -

குடும்ப தகராறில் மனைவியின் கையை துண்டாக வெட்டிய கணவன் கத்தியுடன் போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்தார்.

குடியாத்தம் பிச்சனூர் சுதந்திரவீதியை சேர்ந்தவர் பிச்சாண்டி (வயது 59). சலூன் கடை நடத்தி வருகிறார். இவரது மனைவி பேபி (வயது 49). இவர்களுக்கு திருமணம் ஆகி 35 ஆண்டுகள் ஆகின்றன. 1 மகள், 2 மகன்கள் உள்ளனர். அனைவருக்கும் திருமணம் ஆகி விட்டது. இந்த நிலையில் பேபிக்கு வேறு ஒரு நபருடன் தொடர்பு இருப்பதாக கருதி அவரது நடத்தையில் பிச்சாண்டி சந்தேகம் அடைந்தார்.

இது தொடர்பாக அவர்களுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்த நிலையில் நேற்று இரவு அவர்களுக்கு இடையே மீண்டும் வாய்த்தகராறு ஏற்பட்டுள்ளது. 

அப்போது ஆத்திரம் அடைந்த பிச்சாண்டி கத்தியால் மனைவி பேபியின் வலது கையை துண்டாக வெட்டினார். பேபியின் அலறல் சத்தம் கேட்கவே குடும்பத்தினர் அங்கு வந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக குடியாத்தம் அரசு மருத்துவமனையில் சேர்த்தர். அப்போது மற்றொரு பையில் துண்டான கையையும் எடுத்து வந்தனர். முதலுதவி அளிக்கப்பட்ட பின்னர் மேல்சிகிச்சைக்காக அவரை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர்.

இதனிடையே பிச்சாண்டி குடியாத்தம் நகர் போலீஸ் நிலையத்தில் கத்தியுடன் சரணடைந்தார். அவரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

No comments