ஆற்றில் மூழ்கி உயிருக்கு போராடிய சிங்கள இளைஞர்களை உயிரை துச்சமாக மதித்து மீட்ட முஸ்லிம் இளைஞர்கள்.

Published On Wednesday, 2 August 2017 | 15:33:00

மாவனல்லை நகரை ஊடறுத்து ஒடும் மாஒயா ஆற்றில் இரண்டு இளைஞர்கள் வெள்ளத்தில் அடித் துச் செல்லப்பட்டுள்ளனர். இவர்கள் வெள்ளத்தால் அடித்துச் செல்லப்பட்டு ஆற்றின் ஆழமான இடத்தில் உயிருக்காக போராடிக் கொண்டிருந்த போது மாவனல்லை நகரில் வசிக்கும் மற்றும் வியாபாரம் செய்யும் மக்கள் இவ்விளைஞர்களை மீட்டு இவர்களின் உயிர்களை காப் பாற்றிய சம்பவமொன்று கடந்த (29) சனிக்கிழமை இடம்பெற்றுள்ளது.

நகரிலுள்ள கடொல் பாலம என்ற இடத்தில் இறங்கிய இவர்கள் குளித்துக்கொண்டிருக்கும் போது ஆற்றில் வெள்ளம் பெருக்கெடுத்த மையால் இவர்கள் அடித்து செல்லப் பட்டுள்ளனர்.

பாரிய கயிறுகள் மற்றும் உபகரணங்களை பயன்படுத்தி இந்த இரண்டு சிங்கள இளைஞர்களினதும் உயிர்களை மீட்பதற்கு தமது உயிரையும் துச்சமாக மதித்து இப்பகுதி முஸ்லிம் மக்களின் வழிநடத்தலில் முஸ்லிம் இளைஞர்கள் காட்டிய முன்மாதிரியை இங்கு வருகை தந் திருந்த அனைத்து இன மக்களும் பாராட்டினர்.

உயிர் காப்பாற்றப்பட்ட இளைஞர் களின் பெற்றார்கள், உறவினர்கள் பெரும்பாலானோர் இவர்களை காப்பாற்ற பாடுபட்ட முஸ்லிம் இளைஞர்களையும் வழிகாட்டிய முஸ்லிம் பெற்றோர்களையும் கண்ணீர் மல்க வணங்கிய காட்சி உணர்வு பூர்வமாக இருந்தது.

இங்கு வருகை தந்திருந்த மாவனல்லை பொலிஸ் நிலைய உத்தி யோகத்தர்கள் உட்பட கூடியிருந்த பொது மக்கள் அனைவரும் இவ்வி டயத்தில் மிகவும் பாடுபட்டுழைத்த இளைஞர்களை பாராட்டத் தவற வில்லை.(MN)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved