Breaking News

நேற்று நிதியமைச்சால் அறிவிக்கபட்ட வரி நீக்கம் மற்றும் கடன்கள் முழு விபரம்.இதோ.


மோட்டார் சைக்கிள், கெப் ரக வாகனம் மற்றும் சிறியரக டிரக் வண்டி என்பனவற்றுக்கான வரிகள் நேற்று நள்ளிரவு முதல் குறைக்கப்பட்டுள்ள தோடு இணையத்தள சேவைக்கான வரியும் முற்றாக நீக்கப்பட்டுள்ளதாக நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர நேற்று தெரிவித்தார். இதன் முழு விபரம்.

இது தவிர  நுண் மற்றும் சிறு தொழில் முயற்சியாளர்கள், விவசாயிகள், கோழிப்பண்ணையாளர்கள், பாடசாலை வான் ஒட்டுநர்கள், ஊடகவியலாளர்கள் போன்றோரை ஊக்கு விப்பதற்கான கடன் திட்டங்களும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதோடு இவற்றில் கட னுக்கான பெரும்பகுதி வட்டியை அரசாங்கம் பொறுப்பேற்பதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.

நிதி மற்றும் ஊடக அமைச்சில் நேற்று (17) நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் மாநாட்டில் இந்த புதிய நிவாரணங்களை அமைச்சர் அறிவித்தார்.

இதில் இணையங்களுக்கான 10 வீத வரி செப்டம்பர் 01 முதல் நீக்கப்படுவதோடு இதனூடாக பாவனையாளர்களுக்கு 25 வீத மேலதிக நிவாரணம் கிடைப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.

வரிச்சலுகையினூடாக மோட்டார்சைக்கிள் விலை 50 ஆயிரம் ரூபா முதல் ஒரு இலட்சம் ரூபா வரை குறைவடையும் அதேவேளை,சிறிய ரக டிரக் வண்டி மற்றும் கெப் ரக வாகன விலைகள் 3 இலட்சம் ரூபாவினாலும் குறை வடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அமைச்சர்,
 இளம் தொழில் முயற்சியாளர்கள், இளைஞர்கள் போன்றோரை இலக்கு வைத்து நிவாரணங்களை வழங்க அரசாங்கம் திட்ட மிட்டுள்ளது.

இதனூடாக புதிதாக தொழில் வாய்ப்புகள் உருவாகும் என நம்புகிறோம். வியாபாரங்களை ஆரம்பிப்பதற்கு ஆர்வமுள்ள இளைஞர்களுக்கு உதவும் வகையில் புதிய கடன் திட்டங்கள் மற்றும் வரிச் சலுகை செய்யப்பட்டுள்ளது.

இதன் முதற்கட்டமாக செப்டம்பர் 01 முதல் இணையத்திற்கு 
அறவிடும் 10 வீத வரி நீக்கப்படுகி றது.

இது தவிர வரவு செலவுத்திட்டத்தினூடாக பிரேரிக்கப்பட்டிருந்த 25 வீத தொலைத் தொடர்பு வரியை அமுல் செய்யாதிருக்கவும் தீர்மானிக்கப்பட் டுள்ளது.

 இந்த சலுகைகளினூடாக பாவனையாளர்கள் 25 வீத மேலதிக சலுகையை பெறுவர். வரிநீக்கம் காரண மாக சேவை வழங்கும்நி றுவனங்கள்10 வீத மேலதிக டேட்டாக்களை வழங்க உடன்பட்டுள்ளன.

இதன் பிரகாரம் 100 ரூபா பெறுமதியான அட்டையின் மூலம் இத்தனை காலமும் 66,78 வீத டேட்டாவே கிடைத்தது. இனி அது 83.48 வீதமாக இருக்கும்.

புதிதாக வியாபாரம் செய்யும் தொழில் முயற்சியாளர்களுக்கு போக்குவரத்திற்காக சிறிய ரக வாகனங்கள் தேவைப்படுகிறது. இதற்காக கெப் ரக வாகனம், சிறிய ரக டிரக் வண்டி மற்றும் மோட்டார்சைக்கிள் என்பவற் றிற்கான வரிகளை குறைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

கெப் ரக வாகனம் மற்றும் சிறிய ரக டிரக் வண்டி என்பவற்றிற்கு 10 இலட் சம் ரூபா உற்பத்தி வரி (45% )அறவிடப்படுகிறது. இதனை 7 இலட்சம் ரூபாவாக குறைத்துள்ளோம்.

இதன் படி 21 இலட்சமாக உள்ள கெப் விலை 18 இலட்சம் ரூபாவாக குறைவடை யும். இதுதவிரசிறியரக டிரக்விலை 16 இலட்சம் ரூபாவில் இருந்து 13 இலட் சம் ரூபாவாக குறைவடையும்.

150 சி.சிக்கு குறைவான மோட்டார் சைக்கிள்களுக்கு 90 வீத வரி அறிவி டப்படுகிறது. இது நள்ளிரவு முதல் நீக்கப்படுகிறது.இனி மேல் இன்ஜின் கொள்ளளவிற்கு ஏற்பவே வரி அறிவி டப்படும்.இந்த வரிச்சலுகையினூடாக உயர்தரத்திலான மோட்டார் சைக்கிள் விலைகள் 50 ஆயிரம் ரூபாமுதல் ஒரு இலட்சம் ரூபாவரைகுறைவடையும்.

 பல்வேறு கடன் திட்டங்களை அறிமுகம் செய்ய அரசாங்கம் முடிவு செய் துள்ளது.இதனூடாக அரசாங்கத்திற்கு 4.4 பில்லியன் நஷ்டம் ஏற்படுகிறது.

இதற்காக வரவு செலவுத்திட்டத்தினு டாகநிதி ஒதுக்கப்பட்டுள்ளது. விவசாய கடன் திட்டதின் கீழ் 5 இலட்சம் ரூபாவரைகடன்வழங்கப்ப டும் இதனை5 வருட காலத்தில் திருப்பிச் செலுத்த முடியும்.

இதில் 75 வீத வட்டியை அரசாங்கம் பொறுப்பேற் கும் கடன் பெறுவோர் 3.27 வீத வட்டி யையே செலுத்தவேண்டும்.

 பாடசாலை பிள்ளைகளை போக்கு வரத்து செய்ய சிறிய வான்களை பயன் படுத்துவோர் 28 ஆசன பஸ்ஸொன் றுக்கு மாறுவதற்கு 40 இலட்சம் ரூபா வரைகடன்வழங்கப்படும்.

கடன்வட்டியில்75வீதத்தைஅரசாங்கம் ஏற்கும். கடன் பெறுவோர் 3.27 வீதத்தை மட்டுமே செலுத்த வேண்டும்.

சூரியக் கல கடன் சகல வீடுகளுக்கும் சூரியக் கலன்களை பொருத்துவதற்கு 3.5 இலட்சம் ரூபா வரை கடனுதவி வழங்கப்படும்.


இதற்காக 6 வீத வட்டியே அறவிடப் படும். 5 வருட காலத்தில் இதனை செலுத்தமுடியும்.

கோழி இறைச்சி குளிரூட்டிகடன் கிராமத்து போசாக்கு மட்டத்தை உயர்துவற்காக சிறந்த கோழி இறைச்சி சார்ந்த உற்பத்திகளை ஊக்குவிப்பதற் காக அதி குளிர்சாதன பெட்டிகளை பெறுவதற்கு 50 ஆயிரம் ரூபா வரை கடன் வழங்கவும் முடிவு செய்யப்பட் டுள்ளது.

இதற்கான வட்டியை அரசாங் கம் முழுமையாக பொறுப்பேற்கும். 5 வருட காலம் வரை கடனை செலுத்த அவகாசம் வழங்கப்படும்.

தொழில் முயற்சிக் கடன் தோட்ட, மலர், அச்சு கைப்பணி, தகவல் தொழில்நுட்பம் மற்றும் சிறு தொழில் முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இலகு கடன் வசதி வழங்கப்ப டும்.

50 மில்லியன் வரைகடன் வழங் கப்படும். இதில் 50 வீத வட்டியை அர சாங்கம் பொறுப்பேற்கும். 6.54 வீதத் தினை கடன்பெறுபவர்கள் செலுத்த வேண்டியிருக்கும்.

ஊடக கடன்

கஷ்டமான சூழ்நிலையில் ஊடகத் தொழில் புரியும் ஊடகவியலாளர்க ளுக்கு கடன் திட்டமொன்று ஆரம் பிக்கப்பட்டுள்ளது. தற்பொழுது கஷ்டமான சூழ்நிலை இல்லாததால் பதிவு செய்யப்பட்ட ஊடகவியலாளர் களுக்கு இந்தக்கடன்வழங்கப்படும்.3 இலட்சம் ரூபா வரை வட்டியில்லா கடன் வழங்கப்படும். 4 வருடத்தில் இதனை திருப்பிச்செலுத்த முடியும்.

வீட்டுக் கடன்
கட்டுமாணப்பணிகள் ஆரம்பிக்கப் பட்டு பூர்த்திசெய்யமுடியாத குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு (750 சதுரஅடிக்கு குறைவானவீடுகள்) 2 இலட்சம் ரூபா வரை கடன் வழங்க இருக்கிறோம். வீட்டை கட்டி முடிப் பதற்கோ அல்லது விஸ்தரிப்பதற்கோ இந்தக் கடனைபெறலாம். இதில் 50 வீத வட்டியை அரசாங்கம் செலுத்தும் அதே வேளை உரிமையாளர்கள் 6.5 வீத வட்டியை செலுத்த வேண்டும்.

ஜனாதிபதி மற்றும் பிரதமரின் வழி காட்டல் மற்றும் ஆலோசனையுடன் இந்த நிவாரண திட்டம் முன்னெ டுக்கப்படுகிறது. இவற்றினூடாக புதிதாக 50 ஆயிரம் தொழில் வாய்ப் புகள் உருவாக அடித்தளம் இடப்ப டும். நாட்டின் பொருளாதார வளர்ச் சியை மேம்படுத்தவும் இந்த திட்டம் உதவும். அடுத்த காலாண்டில் பொரு ளாதார வளர்ச்சி வீதம் 4.5ற்கும் 5 வீதத் திற்கும் இடைப்பட்டதாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது என்றார்.

இங்கு கருத்துத் தெரிவித்த ராஜாங்க அமைச்சர் இரான் விக்ரமரத்ன கூறிய தாவது,

தேர்தலை இலக்கு வைத்து இந்த சலுகைகள் அறிவிக்கப்படவில்லை. அடுத்த வரவு செலவுத்திட்டத்திற்கு முன்னதாகவே இவை முன்வைக்கப் படுகின்றன.

அடுத்த வரவு செலவுத் திட்டத்தில் மேலும் சலுகைகளை எதிர்பார்க்கலாம். நுண் மற்றும் சிறு மத்திய தொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்காக இந்த திட்டங்கள் முன்னெடுக்கப்படுகிறது என்றார்.

No comments