பஹ்ரைன் வைத்தியசாலையில் இருக்கும் இலங்கைப் பெண் யார்? உடன் பகிர்ந்து கண்டு பிடிக்க உதவுங்கள்

Published On Wednesday, 9 August 2017 | 16:18:00

பஹ்ரெய்ன் வைத்தியசாலையொன்றில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் சிகிச்சைப் பெற்றுவரும் இலங்கைப் பெண்ணொருவர் தொடர்பில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தகவல் கோரியுள்ளது.

இப்பெண் தொடர்பில் பஹ்ரேனின் இலங்கை தூதரகத்தின் ஊடாக வெளிநாட்டு பணியகத்துக்கு அறிவிக்கப்பட் டிருந்தது. இப்பெண்ணுக்கு மறதி ஏற்பட்டுள்ளதாகவும் அவர்

இலங்கை, கனேமுல்ல பிரதே சத்தை சேர்ந்த இனோகா தமயந்தி என்ற பெண் என பஹ் ரெய்னிலுள்ள இலங்கை தூதரகம் தெரிவித்து இருந்தாலும், அவரிடம் கடவுச்சிட்டோ ஆள் அடையாளத்தை உறுத்திப் படுத்தும் வகையிலான எவ்வித ஆவணங்களோ இல்லையெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் இலங்கையிலுள்ள தனது வதிவிடம் தொடர்பான எவ் விடயமும் அவருக்கு ஞாபகத்தில் இல்லையெனவும் தூதரகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இவர் தொடர்பில் மேலும் தகவல்களை உறுதிப்படுத் திக்கொள்வதற்கு வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத் துக்கு அவசியமெனவும் அதற்காக பொதுமக்களின் உதவியை எதிர் பார்ப்பதாகவும் தெரிவிக்கின்றனர்.

இப்பெண் தொடர்பில் தகவல் தெரிந்தவர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்துக்கு வருகை தந்தோ 011 286410 என்ற தொலைபேசி இலக்கத் துடன் தொடர்புகொண்டோ தகவல் தெரிவிக்குமாறு கோரப் பட்டுள்ளது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved