பாசியில் இருந்து சமையல் எண்ணெய் ~ அமீரக விஞ்ஞானிகள் கண்டுபிடித்து சாதனை!

Published On Monday, 28 August 2017 | 00:37:00


பாமாயில் எனும் சமையல் எண்ணெய்க்கு மாற்றாக புதிய சமையல் எண்ணெய் ஒன்றை அமீரக தட்பவெப்பத்தில் வளரும் ஒருவகை பாசியிலிருந்து (Algae) கண்டுபிடித்துள்ளனர் அபுதாபி நியூ யார்க் பல்கலைக்கழகத்தை சேர்ந்த பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் அடங்கிய விஞ்ஞானிகள் குழுவினர்.Researchers at New York University Abu Dhabi (NYUAD)Chloroidium genus… என்ற தாவர குடும்பத்தை சேர்ந்த இந்த பாசி அமீரக தட்பவெப்பத்தில் நன்னீரிலும், கடல் நீரிலும் வளரும் தன்மையுடையது மேலும் பண்ணைகளிலும் வளர்க்க முடியும். முன்பு பாமாயில் வளர்ப்புக்காக சில ஆசிய நாடுகளில் பெருமளவில் மழைக்காடுகள் அழிக்கப்பட்டு பாமாயில் மரங்கள் நடப்பட்டதால் சீதோஷ்ண நிலையில் பெரும் மாற்றங்கள் ஏற்பட்டதால் உலக நாடுகள் பல பாமாயிலுக்கு தடை விதித்தமை குறிப்பிடத்தக்கது.


இந்த புதிய வகை பாசியால் மழைக்காடுகளுக்கோ, சீதோஷ்ண நிலைக்கோ பாதிப்பு ஏதும் ஏற்படாது என்பதால் இந்தப் பாசியை எதிர்காலத்தில் அதிகமதிகம் பயிரிடுவதற்கும், பாமாயிலுக்கு மாற்றாக உணவு எணணெய்யாக பயன்படுத்தப்படுவதற்கும் பிரகாசமான வாய்ப்புகள் உள்ளதாகவும் விஞ்ஞானிகள் குழு தெரிவித்துள்ளது.
Source: Gulf News

தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved