கத்தார் அரசாங்கத்தின் ஹஜ்ஜுப்பெருநாள் விடுமுறை பற்றிய உத்தியோக பூர்வ அறிவிப்பு

Published On Monday, 28 August 2017 | 17:43:00

அரச ஊழியர்களுக்கான ஹஜ்ஜுப் பொருநாள் விடுமுறை தினங்கள் பற்றிய உத்தியோப பூர்வ அறிவிப்பு கத்தார் அரசாங்கம் வெளியிட்டுள்ளது. அந்த வகையில் அமைச்சகங்கள், அரச தாபனங்கள், பொது நிறுவனங்கள் போன்றவற்றுக்கான விடுமுறை எதிர்வரும் 31ம் திகதி ஆரம்பிக்கின்றது. அதிலிருந்து எதிர்வரும் செப்டம்பர் மாதம் 7ம் திகதி வரை தொடர்கின்றது. 8ம், 9ம் திகதி வெள்ளி, மற்றும் சனிக் கிழமை என்பதாகல் மீண்டும் செப்டம்பர் 10 திகதி முதல் அனைத்து அரச ஊழியர்களும் பணிக்கு மீண்டும் திரும்புவார்கள். 
தனியார் ஊழியர்களின் விடுமுறை தொடர்பான எந்த விதமான உத்தியோக பூர்வ அறிவிப்புக்களை அரசாங்கம் விடுக்கவில்லை. என்றாலும், தனியார் துறைப் ஊழியர்களைப் பொறுத்த வரை வழமை போன்று 3 நாட்கள் வழங்கப்படுவார்கள். இம்முறை பெருநாள் வெள்ளிக் கிழமை வருதவன் காரணமாக வெள்ளிக்கிழமை தவிர்த்து 3 நாட்கள் சில தனியார் நிறுவனங்ளில் வழங்கப்படவிருக்கின்றன. இவ்வாறு வழங்குகின்ற நிறுவனங்களின் ஊழியர்கள் எதிர்வரும் 5ம் திகதி முதல் பணிக்குத் திரும்புவர். இப்படி வழங்காத நிறுவனங்களின் ஊழியர்கள் 4ம் திகதி முதல் பணிக்கு திரும்புவர்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved