Saturday, 5 August 2017

சவூதியில் பெண்கள் பிகினி ஆடைகளை அணிய அனுமதியளிக்கும் வகையில் புதிய ஆடம்பர திட்டம்

சவூதி அரேபியாவில் கடற்கரை ஓட்டலில் பெண்கள் நீச்சல் உடை அணிய சிறப்பு சட்டத்தின் மூலம் அனுமதி அளிக்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.


சவுதி அரேபிய அரசு நவீன பொருளாதார திட்டத்தை அமல்படுத்தியுள்ளது. அதற்கான புதிய திட்டங்கள் அறிவிக்கப்பட் டுள்ளன. அதன் மூலம் நாட்டின் பொருளாதார நிலை மேம்படும் என கருதுகிறது. 


"The Red Sea" என்ற புதிய திட்டத்தின் கீழ் சவுதி அரேபியாவில் செங்கடலின் கடற்கரையில் அதிநவீன சொகுசு ஓட்டல் கட்டப்படுகிறது. மிக பிர மாண்டமாக அதிக பொருட் செலவில் கட்டப்படும் இந்த ஓட்டல் திட்ட வரையறைகளை பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் நேற்று வெளியிட்டார். 2019ம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ள இந்த திட்டம் 2022ம் ஆண்டு முடிவடையும் என்பதாக எதிர்பார்க்கப்படுகின்றது.


அப்போது இந்த கடற்கரை ஓட்டலில் நடைமுறைப் படுத்தப்பட உள்ள புதிய விதிமுறைகளையும் வெளியிட்டார். அதன்படி பெண் கள் ‘பிகினி’ நீச்சல் உடை அணிய அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அறிவித்தார்.


முஸ்லிம் நாடான சவுதி அரேபியாவில் ‘ஷரியத்’ சட்டம் கடைபிடிக்கப்பட்டு  வருகிறது. அங்கு வெளியில் வரும் பெண்கள் உடல் முழுவதையும் மறைக்கும் வகையில் உடை அணிய வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது. 

கடந்த வாரம் கூட அரைகுறையாக ஆடைய அணிந்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்ட பெண் கைது செய்யப்பட்டு இருந்தமை குறிப்பிடத்தக்கது. இது தொடர்பாக பாரிய கருத்தாடல்கள் சமூக வலைதளங்களில் இடம்பெற்று வருகின்றன. 

BIKINI என்ற ஆடைகளை சவூதியில் அனுமதிக்கப்பட்டால் புர்கா அணி வதற்கு பதிலாக இதனை அணிய அனுமதிகப்படுவதால் அவற்றை BURKINI என்று தான் அழைக்க வேண்டும் என்பதாக பலரும் கருத்துக்களைப் பதிவிட்டு வருகின்றனர். 


திட்டம் பற்றி வீடியோ இணைப்பு

Author: verified_user

0 comments: