மூன்று மில்லியன் மக்களை பாதுகாக்க மக்கா நகரில் பாதுகாப்பு ஒத்திகை...!

Published On Saturday, 26 August 2017 | 10:48:00

மக்காவுக்கு புனிதப்பயணம் மேற்கொள்ள உலகம் முழுவதும் இருந்து இஸ்லாமியர்கள் வருகை தருவார்கள்.
இந்த ஆண்டு மூன்று மில்லியன் மக்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது அதனைத்தொடர்ந்து பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
ராணுவத்தினர் பாதுகாப்பு பணிகளை மேற்கொள் கின்றனர் பாதுகாப்பு ஒத்திகை நிகழ்ச்சி மக்கா அருகே நடைபெற்றது இளவரசர் முகமதுபின் சல்மான் பங்கேற்று ஒத்தி கை நிகழ்ச்சியை பார்வையிட்டார்.
கத்தார் நாட்டுடன் ராஜிய உறவுகளை சவூதி அரேபியா துண்டித்துக்கொண்டுள்ளபோதும் ஹஜ் பயணத் துக்காக கத்தார் மக்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.

கடந்த ஆண்டு ஈரானில் இருந்து ஹஜ்பயணிகள் வரவில்லை, இந்த ஆண்டு அந்நாட்டில் இருந்து ஒரு லட்சம் பேர் மக்கா புனிதப்பயணம் மேற்கொ ள்ளவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
(முஹம்மது ஹாசில்)
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved