Breaking News

சவூதி விமானங்கள் கத்தாரில் தரையிறங்க இன்னும் உத்தியோக பூர்வ அனுமதி கிடைக்க வில்லை - சவூதி தெரிவிப்பு!

சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் விமானங்கள் கத்தாரில் தரையிறங்க இன்னும் உத்தியோக பூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சவூதிய்யா விமானச் சேவையின் முகாமையாளர் சாலிஹ் அல் ஜெஸ்ஸார் இந்த செய்தியை வெளியிட்டுள்ளார். இது தொடர்பாக மேலும் அவர் தெரிவித்துள்ளதாவது,

மன்னர் சல்மான் அவர்கள் உத்தரவின் படி கத்தாரிலிருந்து ஹஜ் கடமையை நிறைவேற்ற விமானம் மூலம் பயணிக்க விரும்புவர்களை சவூதி அழைத்து வர தீர்மானிக்கப்பட்டது. இதற்காக சவூதி எயார்லைன்ஸ் நிறுவனத்தின் விஷேட விமானங்கள் கத்தாருக்கு அனுப்பி  வைக்கப்பட இருக்கின்றன. என்றாலும் கத்தாரில் சவூதி எயார்லைன்ஸ் நிறுவத்தின் விமானங்கள் தரையிரங்க வேண்டி அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைக்கு இன்னும் கத்தாரின் உத்தியோக பூர்வ அனுமதி கிடைக்கவில்லை என்றார்.

கத்தாரிலிருந்து வருபவர்கள் அனைவரும் மன்னர் சல்மானின் விருந்தினர்களாக அழைத்து வரப்பட இருக்கின்றார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆங்கிலத்தில் - அரப் நியூஸ்
தமிழில் - உண்மையின் பக்கம்

No comments