Breaking News

டுபாயில் பணிப்பெண்ணாக பணி புரிந்து விட்டு நாடு திரும்பிய இலங்கைப் பெண் திடீர் மரணம்! காரணம் இதுதான்!

வெளிநாடொன்றில் பணியாற்றி விட்டு நாடு திரும்பிய பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இன்புளூவன்சா காய்ச்சல் காரணமாக குறித்த பெண் உயிரிழந்துள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகல் வெளியிட்டுள்ளது.
டுபாய் நாட்டிற்கு பணிப்பெண்ணாக சென்று மீண்டும் நாட்டிற்கு வந்த சிலாபம் பகுதியை சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
இந்த பெண் காய்ச்சல் காரணமாக சிலாபம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையிலேயே உயிரிழந்துள்ளார்.
உயிரிழந்த பெண்ணின் வீட்டிலுள்ள மேலும் சில உறவினர்கள் சிலாபம் வைத்தியசாலையில் சிகிச்சை பெறுவதாக குறிப்பிடப்படுகின்றது.
அவர்களுக்கு இன்புளூவன்சா காய்ச்சல் தொற்றியுள்ளதா என பரிசோதனை மேற்கொள்ளப்படுகின்றதென வைத்தியசாலை பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

No comments