அவசர காலங்களில் சவூதி கூட்டணியின் விமான நிலையத்தை பாவிக்க கத்தார் விமானங்களுக்கு விஷேட அனுமதி!

Published On Tuesday, 1 August 2017 | 01:02:00

சவூதி, அமீரகம், பஹ்ரைன், எகிப்து ஆகிய அரபு நாடுகள் கத்தாருடனான ராஜிய உறவுகளை துண்டித்துக் கொண்டதை தொடர்ந்து கத்தார் மீது பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அவற்றில் வான்வழி, தரைவழி மற்றும் கடல்வழி போக்குவரத்தும் தடை செய்யப்பட்டன.

இந்நிலையில் சர்வதேச வான்வழி சட்டத்திற்கு ஏற்ப அவசரகாலங்களின் போது மட்டும் அருகிலுள்ள 9 சவுதி, அமீரகம், பஹ்ரைன் மற்றும் எகிப்து விமான நிலையங்களை பயன்படுத்திக் கொள்ளவும், விபத்துக்காலங்களில் மீட்புப்பணிகளில் உதவுவதற்கும் சவுதி அரேபியாவின் வான்வழி போக்குவரத்திற்கான ஆணையம் (General Authority of Civil Aviation - GACA) சம்மதம் தெரிவித்துள்ளது.

இந்த அறிவிப்பு ஆகஸ்ட் 1 ஆம் தேதி முதல் அமுலுக்கு வருவதுடன் மேற்கொண்டும் இது தொடர்புடைய விஷயங்களை பேசி இறுதி செய்து கொள்வதற்கும் சம்பந்தப்பட்ட நாடுகளுக்கிடையே சர்வதேச வான்வழி கழகத்தின் (International Civil Aviation Organization - ICAO) உதவியுடன் இன்று திங்கட்கிழமை பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது.

Source: Saudi Gazetteவி
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved