Wednesday, 16 August 2017

உரிய முறையில் ஹஜ் அனுமதி பெறாமல் சவூதி வந்த 95,400 பேர் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்

ஹஜ் கடமைகளை நிறைவேற்ற சட்டவிரோதமாக மக்காவிற்கு சென்ற 95 ஆயிரத்து 400 பேரை சவூதி அதிகாரிகள் திருப்பி அனுப்பியுள்ளனர்.

ஐக்கிய அரபு இராஜ்ஜியத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து மக்காஹவிற்கு ஹஜ் அனுமதி இல்லாமல் வந்தவர்களே இவ்வாறு திருப்பி அனுப்பட்டுள்ளனர்.

புராதன கடற்பகுதி வழியாக யாத்ரீகர்கள் நுழைவதை கட்டுப்படுத்தும் சட்டங்களுக்கு அமைவாக உத்தியோகபூர் அனுமதிகள் இல்லாதவர்கள் திருப்பி அனுப்பட்டுள்ளதாக ஹஜ் பாதுகாப்பு படைகளின் தளபதியான காலித் அல் ஹர்பி தெரிவித்துள்ளார்.

ஹஜ் விதிமுறைகளின் படி ஹஜ் கடமையை நிறைவேற்ற வருபவர்கள் கண்டிப்பாக உத்தியோகபூர் அனுமதியை பெற்றிருக்க வேண்டும் எனவும், அனுமதி இல்லாமல் மக்காவிற்குள் நுழைய முயற்சித்த 47 ஆயிரத்து 700 வாகனங்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை அனைத்து யாத்ரீகர்களுக்கும் சேவை செய்ய தயாராக இருக்கின்ற நிலையில், ஹஜ் கடமைகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் எவரையும் அனுமதிக்க மாட்டோம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஆங்கிலத்தில் அரப் நியூஸ் 
தமிழில் - உதயன்

Author: verified_user

0 comments: