லண்டனியிலிருந்து ஹஜ்ஜுக்காக சைக்கிளில் புறப்பட்ட 8 பேர் 5 வாரங்களின் பின் மதீனா வந்தடைந்தனர்.

Published On Monday, 21 August 2017 | 09:05:00

புனித ஹஜ் கடமையை நிறைவேற்ற இங்கிலாந்தின் லண்டன் நகரிலிருந்து புறப்பட்ட 8 முஸ்லிம்கள்  புனித மதீனா நகரை வந்தடைந்தனர். 
இவர்கள் லண்டன் நகரின் East London Mosque யிலிருந்து புறப்பட்டு பிரான்ஸ், ஜேர்மனி, ஆஸ்ரியா, லிட்ச்டென்சன், ஸ்விஸ்லாந்து, இத்தாலி, க்ரீஸ், எகிப்து போன்ற நாடுகளைக் கடந்து சவூதி அரேபியாவை வந்தடைந்துள்ளனர்.


இவர்கள் இந்த பயணத்தின் போது 3500க்கு மேற்பட்ட கீலோ மீற்றர்களைக் கடந்துள்ளனர். கடந்த வெள்ளிக்கிழமை இவர்கள் ஜித்தா நகரை வந்தடைந்த இவர்கள் நேற்று மதீனாவை வந்தடைந்தனர்.


இவர்களையும் இவர்களது நோக்கத்தையும் இறைவன் பொருந்திக் கொள்வானாக!
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved