சவூதி அரேபியாவில் புகைப்பிடிக்கும்பழக்கத்தால் வருடத்துக்கு 70000 பேர் உயிரிழப்பு!

Published On Wednesday, 23 August 2017 | 00:43:00


உலக சுகாதார மையத்தின் அறிக்கையின்படி, ஆண்டுக்கு சுமார் 7 மில்லியன் உலக மக்கள் புகை பிடிப்பு மற்றும் பல்வேறு புகையிலை பழக்கங்களால் உயிரிழக்கின்றனர். சவுதி அரேபியாவில் மட்டும் ஆண்டுக்கு சுமார் 70,000 பேர் புகை பழக்கத்தால் உயிரிழக்கின்றனர்.

எனவே, புகைப்பழக்கத்திற்கு எதிரான பிரச்சாராங்களை ஒருபுறம் துவக்கியுள்ள சவுதி சுகாதாரத்துறை புகைப்பிடிக்கும் ஆண், பெண் நோயாளிகளை குணப்படுத்துவதற்காக நாடு முழுவதும் 31 சிகிச்சை மையங்களை பல்வேறு அரசு மருத்துவமனைகளில் துவக்கியுள்ளனர். அதனடிப்படையில், அபஹா நகரில் ஆண், பெண் என இருபாலாருக்கும் தனித்தனியே சிகிச்சையளிக்கும் மையங்களை துவக்கியுள்ளதுடன், இங்கு 3 மாதங்கள் தங்கியிருந்து சிகிச்சை பெறுவோர் புகைப்பழக்கத்தை மறந்த புது மனிதர்களாக வீடு திரும்பலாம்.

மேலும், சவுதி வாழ் மக்கள் மத்தியிலிருந்து புகைப்பழக்கத்தை ஒழிப்பதற்காக கடந்த ஜூன் மாதம் முதல் சிகரெட் விலையின் மீது காலல் வரிகள் 2 மடங்காக உயர்த்தப்பட்டது. அதேபோல், சவுதி அரசின் பட்ஜெட்டிலும் புகை பழக்கங்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்திற்காக ஓரளவு நிதி ஒதுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Source: Arab News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved