சவூதி மன்னரின் மனிதாபிமானம்! யெமன் மக்களின் உயிர்களை காப்பற்ற 66.7 மில்லியன் டாலர்கள் அன்பளிப்பு...!

Published On Monday, 7 August 2017 | 00:33:00

ஏமனில் காலரா நோயை கட்டுப்படுத்த சவுதி அரேபியா நிதி உதவி செய்துள்ளது.

உலக சுகாதார நிறுவனத்திடம் 33.7மில்லியன் டாலர் அளித்துள்ளது சவுதிஅரேபியா. இது தொடர்பான ஒப்பந்தம் ரியாத்தில் செய்யப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் அரசர் சல்மானின் மனிதநேய உதவி மைய அறங்காவலர் அப்துல்லா அல்ரபியா மற்றும் உலக சுகாதார நிறுவனத்தின் இயக்குநர் முகமது பக்ரி கையெழுத்திட்டனர்.

சவுதி அரேபியா ஏற்கனவே 66.7மில்லியன் டாலர் வழங்குவதாக உறுதியளித்திருந்தது.கடந்த வாரம் 33மில்லியன் டாலர் வழங்கப்பட்டுவிட்டது. 

தற்போது மீதத்தொகை 33.7மில்லியன் டாலர் வழங்குவதற்கான ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. 

உலக சுகாதார நிறுவனத்தின் பணிகளுக்காக 8.2மில்லியன் டாலர் நன்கொடை அளித்துள்ளது அரசரின் அறக்கட்டளை. 

அத்துடன் 550டன் மருந்துப்பொருட்கள், மருத்துவ உபகரணங்கள் ஆகியவையும் அன்பளிப்பாக அளித்துள்ளது. 

மேலும் பல உதவிகளை ஏமன் மக்களுக்காக வழங்க தயாராக உள்ளதாகவும் சவுதிமன்னர் சல்மான்பின் அப்துல் அஜிஸ் , பட்டத்து இளவரசர் முகமத்பின்சல்மான் தெரிவித்துள்ளனர். ஏமனில் 6லட்சம் பேர் காலராவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

1947க்குப்பின் அதிகளவில் மக்கள் இந்நோயால் பாதிக்கப்பட்டுள்ளது தற்போது ஏமனில் என்பது குறிப்பிடத்தக்கது..
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved