ரூ 650 கோடி செலவில் சவுதி மன்னரின் ஆடம்பர விடுமுறை கொண்டாட்டம்! 800 அறைகள்! 200 கார்கள்

Published On Wednesday, 23 August 2017 | 12:23:00

மொராக்கோ நாட்டில் ஒரு மாத காலம் விடுமுறையை கழிக்க சவுதி மன்னர் சுமார் ரூ 650 கோடி (100 மில்லியன் டாலர்) செலவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

சவுதி மன்னர் சல்மான் கோடை கால விடுமுறையை தமக்கு மிகவும் பிடித்த மொராக்கோ நாட்டில் உள்ள டேன்ஜியர் பகுதியில் மிகவும் ஆடம்பரமாக கழித்துள்ளார்.

அவருடன் அரச குடும்பத்தினர் உள்ளிட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட உதவியாளர்கள் மற்றும் பணியாளர்கள் இந்த விடுமுறையில் பயணித்துள்ளனர்.

டேன்ஜியர் பகுதியில் அமைந்துள்ள 74 ஏக்கர் பரப்பளவு கொண்ட தமக்கு சொந்தமான அரண்மனையில் மன்னர் சல்மான் தங்கியுள்ளார். ஒரு மாத காலம் தங்கிய மன்னரின் பணிவிடைக்காக 200 கார்கள் எந்த நேரத்திலும் தயார் நிலையில் இருந்ததாகவும், அதில் பெரும்பாலானவை எப்போதும் பயன்பாட்டில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

மன்னரின் வருகையை முன்னிட்டு கடந்த ஓராண்டு காலம் இந்த அரண்மனை விரிவாக புதுப்பிக்கப்பட்டது. மொராக்கோ வந்திறங்கிய மன்னரை அந்நாட்டு பிரதமர் சாதேடியன் ஒத்மணி விமான நிலையம் வந்து வரவேற்றுள்ளார்.

புதுப்பிட்டப்பட்ட புது அரண்மனையில் புதிதாக ஹெலிகொப்டர் தரை இறங்கும் வகையில் புதிய தளம் ஒன்றையும், புதிதாக சில குடியிருப்புகளையும் கட்டி முடித்துள்ளனர்.

அது மட்டுமின்றி பாதுகாப்புக்காக மொராக்கோ அரசின் 30 பேர் கொண்ட சிறப்பு படையும் வழங்கப்பட்டிருந்தது.

மன்னரின் இந்த திடீர் விடுமுறை கொண்டாட்டமானது சர்ச்சையை எழுப்பியிருந்தாலும் அது அந்த நாட்டு ஊடகங்களில் வெளியாவதில்லை.

சவுதி அரேபியாவில் தனி நபர் ஒருவருக்கு சராசரி ஆண்டு ஊதியமானது 33,000 டாலர் என்ற நிலையில் மன்னரின் ஒரு மாத கால விடுமுறைக்கு 100 மில்லியன் டாலர் செலவு செய்திருப்பது மக்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியிருப்பதாக கூறப்படுகிறது.

ஆனாலும் மன்னரின் இந்த வருகையானது மொராக்கோ நாட்டின் சுற்றுலா தொடர்பான வருவாயில் 1.5 சதவீதம் அதிக லாபம் ஈட்டியுள்ளதாக கூறப்படுகிறது.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved