மக்காவில் ஹஜ் யாத்திரிகர்கள் தங்கியிருந்த தங்குமிடத்தில் தீ விபத்து. 600 பேர்வரை மீட்பு.

Published On Monday, 21 August 2017 | 17:39:00

மக்காவில் ஹஜ் யாத்திரிகர்கள் தங்கியிருந்த தங்குமிடத்தில் தீ விபத்து ஏற்ப்பட்டுள்ளது. 

இதில் துருக்கி மற்றும் யெமனைச்சேர்ந்த அறுநூறு ஹஜ் யாத்திரிகர்கள் பாதுகாப்பாக காப்பாற்றப்பட்டனர்.

இந்த தீ விபத்து இன்று காலை மக்கா அல் அஸீஸியா பகுதியில் அமைந்துள்ள ஹோட்டல் ஒன்றில் இடம்பெற்றிருப்பதாக சவூதி பிரஸ் ஏஜென்ஸி செய்தி வெளியிட்டுள்ளது.

மக்கா தீயணைப்பு துறையின் இயக்குனரான மேஜர் நயீப் அல் சரீப் இதுபற்றி தெரிவிக்கையில் மேற்குறித்த இடத்தில் அமைந்துள்ள பதினைந்து மாடி ஹோட்டலின் பதினைந்தாவது மாடியிலேயே இந்த தீ விபத்து சம்பவம் ஏற்பட்டிருப்பதாக குறிப்பிட்டுள்ளார் எயார் கண்டிஷனில் இருந்து வெளியாகிய புகை தீ விபத்துக்கான காரணமாக கொள்ளப்படுகின்றது அந்த நேரத்தில் ஹோட்டலில் தங்கியிருந்த ஹஜ் யாத்திரிகர்கள்அனைவரும் தீயணைப்பு படைவீரர்களின் உதவியுடன் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனர்.

சம்பவத்தில் உயிரழப்புகளோ தீக்காயங்களோ எவருக்கும் ஏற்படவில்லையென உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

ஆங்கிலத்தில் - அரப் நியூஸ்
தமிழில் - - Razana Manaf-
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved