சவூதியில் காலமான இலங்கை சகோதரரின் ஜனாஸா 55 நாட்களின் பின்னர் நல்லடக்கம்! காரணம் இது தான்!

Published On Friday, 4 August 2017 | 02:37:00

சவூதி அரேபியாவில் தமாம் நகரில் காலமானதாக கூறப்படும் சாய்ந்தமருது கபூர் விதியைச் சேர்ந்த மொஹிதீன் சுலைமான் அப்துல் பரீட் என்பவரின் ஜனாஸா ஏறத்தாழ ஒரு மாதமும் இருபத்தைந்து (55) நாட்களின் பின்னர் புதன்கிழமை (02) நண்பகல் அங்கு நல்லடக்கம் செய்யப் பட்டுள்ளது. 

காலஞ்சென்ற அப்துல் பரீத் அனுமதிக்கப்பட்டிருந்த வைத்தியசாலைக்கு செலுத்த வேண்டியிருந்த சுமார் இரண்டு இலட்சம் ரியால்களை செலுத்தப்படாததன் கார ணமாகவே அவரது ஜனாஸாவை அங்கிருந்து எடுத்து நல்லடக்கம் செய்வதில் தாமதம் ஏற்பட்டதாகக் கூறப்படுகின்றது. 

இறந்தவரின் குடும்பத்தினர் எடுத்த முயற்சியில், வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு மற்றும் நலன்புரி அமைச்சர் திருமதி தலதா அத்துகோரளவிடம் இது கொண்டு செல்லபட்டு , அங்குள்ள தொழிலமைச்சினூடாக, ரியாதிலுள்ள இலங்கை தூதரகத்தின் ஒத்துழைப்புடன் இந்த ஜனாஸா வைத்தியசாலையிலிருந்து பெறப் பட்டு நல்லடக்கம் செய்யப்பட்டது. 

இதற்கு அமைச்சர் ரவுப் ஹகீம் பல வழிகளில் உதவிகள் புரிந்ததாக அவரின் செயலாளர் ஏ.எம்.ஜவ்பர் தெரிவித்தார். 

பெண் பிள்ளைகள் இருவரினதும் ஆண் பிள்ளை ஒருவரினதும் தந் தையான காலம்சென்ற எம்.எஸ். அப்துல் பரீட் சவூதி அரேபிய புகையிரத நிறுவனத்தில் சமிக்ஞை மற்றும் தொலைத்தொடர்பு தொழில்நுட்பப் பிரிவில் கடமையாற்றியவர். 

அங்கு அவர் 23 வருடங்களாக பணியாற்றியதாகவும் ஏ.எம்.ஜவ்பர் மேலும் கூறினார்.
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved