துபாயில் ஜெயிலை சேதப்படுத்திய கைதிக்கு 44,600 திர்ஹம் அபராதம் விதிப்பு

Published On Wednesday, 2 August 2017 | 12:18:00


துபாயில் கடந்த 2014 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில் சிறைபட்டிருந்த இமாராத் கைதி ஒருவர் சக கைதிகள் மற்றும் போலீஸார் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படும் வகையிலும் ஜெயில் சொத்துக்களை நாசம் செய்ததற்காகவும் 44,600 திர்ஹம் நஷ்டஈடு செலுத்துமாறு கூடுதலாக 6 மாத சிறை தண்டனையை அனுபவிக்குமாறும் துபை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

31 வயது இமாராத் கைதி ஒருவர் புகைப்பிடிக்க சிகரெட் கேட்டு கிடைக்காததால் அங்கிருந்த சிசிடிவி கேமிராவை பேப்பர் கொண்டு மறைத்துவிட்டு தன்னுடைய படுக்கையிலிருந்த மெத்தையை லைட்டர் மூலம் தீயிட்டு எரித்துள்ளார். மேலும் எரிந்து கொண்டிருந்த மெத்தையை கைதிகள் உணவருந்தும் பகுதியில் வீசியதுடன் முழு சிறைச்சாலையையும் எரித்துவிடுவேன் எனவும் மிரட்டியுள்ளார்.

சிகரெட் கேட்டு அந்த கைதி செய்த அளப்பரை 3 வருட வழக்கு விசாரணைக்குப்பின் சேதமான ஜெயிலை பழுதுபார்ப்பதற்கான நஷ்டஈடாக 44,600 அபராதம் செலுத்த வேண்டும் என முடிவுக்கு வந்துள்ளது.

சினங்கொண்ட சிங்கத்த கூண்டுல அடைச்சா அந்த கூண்டையே செதச்சிடும் பரவாயில்லையா... என்ற காமெடி நினைவுக்கு வருதா!

Source: Gulf News
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

Loading...
 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved