ஷார்ஜாவில் 3 நாட்கள் ஹஜ்ஜூப் பெருநாள் சிறப்பு தள்ளுபடி விற்பனைத் திருவிழா !

Published On Sunday, 27 August 2017 | 15:10:00

ஷார்ஜாவில் முதன்முதலாக கோடைகால சிறப்புத் தள்ளுபடி விற்பனை (Sharjah Summer Grand Discounts campaign) 3 நாட்களுக்கு நடத்தப்படுகிறது. இந்த சிறப்பு தள்ளுபடி விற்பனைத் திருவிழா எதிர்வரும் செவ்வாய்க்கிழமை முதல் ஆகஸ்ட் 31 ஆம் தேதி வியாழன் நள்ளிரவு 12 மணிவரை நீடிக்கும்.


ஷார்ஜா முழுவதிலுமுள்ள 1000 மேற்பட்ட சில்லரை விற்பனை கடைகளும், பல ஷாப்பிங் மால்களும், தரமான பல நிறுவனங்களின் பிராண்டுகளும் இந்த சிறப்புத் தள்ளுபடி விற்பனையில் பங்குபெறுவதை உறுதி செய்துள்ளன. சுமார் 80 சதவிகிதம் வரை தள்ளுபடி விலையில் பல பொருட்கள் விற்பனை செய்யப்படவுள்ளன.தள்ளுபடி விற்பனையுடன் கூடுதலாக கார் போன்ற பல பரிசுப் பொருட்களும், பரிசுக் கூப்பன்களும் வாடிக்கையாளர்களுக்கு வழங்கப்படவுள்ளன. சுற்றுலாப் பயணிகளையும் உள்ளூர் வாடிக்கையாளர்களையும் ஈர்க்கும் வகையில் இந்த விற்பனைத் திருவிழா அமையும் நம்பிக்கை தெரிவித்துள்ளனர் ஷார்ஜா அதிகாரிகள் Sharjah Tourism and Commerce Development Authority (SCTDA).Source: Khaleej Times / Msn
தமிழில்: நம்ம ஊரான்
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved