Breaking News

கோழி இறைச்சித் தேவையை நிவர்த்தி செய்ய கத்தாரில் 2 மில்லியன் சதுர மீட்டரில் மிகப் பெரிய கோழி பண்ணை!

தமக்கான தேவையினை எந்நாட்டையும் சாராமல் தாமே உருவாக்கிக் கொள்ளும் வகையில், நீண்ட கால நோக்கில் பல்வேறு திட்டங்களைத் தீட்டுவதில் கத்தர் முனைப்பு காட்டி வருகிறது. அவ்வகையில் சுமார் 2 மில்லியன் சதுர மீட்டர் பரப்பளவில் மிகப் பெரிய கோழிப் பண்ணை ஒன்றை உருவாக்கும் திட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. இப்பண்ணை கோழிக்கான தீவனத்திலிருந்து பேக்கிங் வரை அனைத்து வசதிகளுடையதாக இருக்கும். தொடக்கத்தில் ஆண்டுக்கு 7 மில்லியன் கிலோ உற்பத்தி இருக்கும். அதனை ஆண்டுக்கு இரு மடங்காக உயர்த்தும் வகையிலும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

கத்தரின் தினசரி தேவையில் சுமார் 60 சதவீதத்தைப் பூர்த்தி செய்யும் வகையில் இப்பண்ணை அமையும். இத்திட்டம் சுமார் 236 மில்லியன் கத்தர் ரியால் முதலீட்டில் தொடங்கப்பட உள்ளது எனவும் 2018 ஆம் ஆண்டின் இறுதி காலாண்டில் உற்பத்தியினைத் தொடங்கும் எனவும் இப்பண்ணையினை நிறுவியுள்ள அல் மனா குரூப்பின் துணை செயலர் ஹமத் முஹம்மது அல் மனா அறிவித்துள்ளார்.

கத்தருக்கான தினசரி ஃப்ரஷ் கோழி இறைச்சி தேவை இதுவரை சவூதியின் அல் யவ்ம் பூர்த்தி செய்து வந்தது குறிப்பிடத்தக்கது.
(அப்துர் ரஹ்மான்)

No comments