பெற்றோர்களே குழந்தைகள் விடயத்தில் எச்சரிக்கையாக இருங்கள்! - அடுப்பில் தவறி வீழ்ந்த, 2 மாத குழந்தை

Published On Monday, 21 August 2017 | 16:56:00

அடுப்பில் தவறி வீழ்ந்ததில் பாரிய தீ காயங்களுடன் இரண்டு மாத குழந்தை ஒன்று வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளது. 

பொகவந்தலாவ குயினா கிழ்ப் பிரிவில் 02 மாத பெண் குழந்தை ஒன்று தவறி அடுப்பில் வீழ்ந்தாக கூறி பாரிய தீ காயங்களுடன் பொகவந்தலாவ மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கபட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்தச் சம்பவம் பொகவந்தலாவ பொலிஸாருக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாக பொலிஸார் தெறிவித்தனர். 

நேற்று இரவு இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

குழந்தையின் தாய் வீட்டு வேலைகளில் ஈடுபட்டு கொண்டிருந்த போது இரண்டு மாத குழந்தை அடுப்பில் தவறி வீழ்ந்தாக பொய்யான வாக்கு முலத்தினை வழங்கிய போதே வைத்தியருக்கு சந்தேகம் ஏற்பட்டு பொகவந்தலாவ பொலிஸாருக்கு தகவல் வழங்கபட்டுள்ளது. 

பாரிய எரி காயங்களுக்கு உள்ளான இரண்டு மாத பெண் குழந்தையான அனுஷாகுமாரி மேலதிக சிகிச்சைக்காக பொகவந்தலாவ வைத்தியசாலையில் இருந்து டிக்கோயா கிழங்கன் வைத்தியசாலைக்கு மாற்றபட்டு மீண்டு நாவலப்பிட்டி மாவட்ட வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாக வைத்தியசாலை தரப்பினர் தெரிவித்துள்ளனர். 

குறித்த தாய்க்கு மூன்று குழந்தைகள் இருப்பதாகவும் இவரின் கணவர் தொழில் நிமித்தம் வௌியில் சென்றுள்ளதாகவும் வீட்டில் தாயும், எரிகாயங்களுக்கு உள்ளான குழந்தையும், மேலும் இரண்டு குழந்தைகளும் வீட்டில் இருந்துள்ளனர். 

சமையல் அறையில் தொங்க விடபட்டிருந்த தொட்டிலும், அடுப்பும் சமநிலையில் இருந்துள்ளன. 

தொட்டிலில் சீலை ஒன்று சுற்றப்பட்டிருந்தாகவும் தொங்கவிடபட்ட தொட்டியில் தீ பற்றிய போதே குழந்தைக்கு தீ காயங்கள் ஏற்பட்டிருக்கலாமென பொலிஸார் சம்பவ இடத்திற்கு சென்று விசார​ணைகளை மேற்கொண்டபோது தெரியவந்துள்ளது. 

இதேவேளை, குழந்தை தொங்கி கொண்டிருந்த தொட்டியின் அடிபகுதியின் கீழே குப்பி விளக்கு ஒன்றும் சாய்ந்து கிடந்ததாகவும் பொலிஸாரின் ஆரம்பகட்ட விசாரணைகளில் இருந்து தெரியவந்துள்ளது. 
Share this article :


0 comments:

இந்த செய்தி தொடர்பான உங்கள் கருத்தை பதிவிடவும்

 
Support : Blogger
Proudly powered by உண்மையின் பக்கம்
Copyright © 2016. உண்மையின் பக்கம் - All Rights Reserved